தமிழ்நாடு

தமிழகத்தில் எரிவாயு குழாய் அமைக்க இடைக்காலத் தடை!

எரிவாயு குழாய் அமைப்பதற்கான மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் எரிவாயு குழாய் அமைக்க இடைக்காலத் தடை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைப்பதற்கான மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ராமநாதபுரம் - தூத்துக்குடி விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஸ்பிக் மற்றும் ஸ்டெர்லைட் நிறுவனங்கள் தமிழகத்தில் எரிவாயு குழாய் அமைக்க மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதித்த உயர்நீதிமன்ற கிளை, விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து பெட்ரோலியத்துறை செயலர், சுற்றுச்சூழல் செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories