தமிழ்நாடு

நீட் தேர்வு : பலத்த சோதனைகளுக்குப் பின்னர் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்!

நாடு முழுவதும் 155 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. 15 லட்சம் மாணவ மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுதுகிறார்கள்.

நீட் தேர்வு : பலத்த சோதனைகளுக்குப் பின்னர் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 155 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. 15 லட்சம் மாணவ மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுதுகிறார்கள்.

தமிழகத்தில் ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உட்பட 14 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரையில் நீட் தேர்வு எழுதும் மையங்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு : பலத்த சோதனைகளுக்குப் பின்னர் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்!

இன்று பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய நீட் தேர்வுக்கு நண்பகல் 12 மணிக்கே மாணவர்கள் பலத்த சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். தாங்கள் அணிந்து வந்த அணிகலன்களை அகற்றிய பின்னரே மாணவிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆதார் கார்டு இல்லாமல் வந்த மாணவர்களும், காலதாமதமாக வந்த மாணவர்களும் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. மாணவர்கள் அணிந்திருந்த கால்சட்டைகளில் மெட்டல் ஜிப் இருந்ததால் அனுமதிக்க மறுத்ததாக தகவல் பரவியதால் சர்ச்சை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories