தமிழ்நாடு

சென்னை : பாஸ்போர்ட் இல்லாமல் தங்கியிருந்த இலங்கை இளைஞர் கைது !

சென்னை : பாஸ்போர்ட் இல்லாமல் தங்கியிருந்த இலங்கை இளைஞர் கைது !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சென்னை பூந்தமல்லியில் பாஸ்போர்ட் இல்லாமல் தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஓராண்டாக, சென்னை பூந்தமல்லியில் தங்கியிருந்த தானுகா ரோஷன் மீது இலங்கையில் கொலை வழக்கு உள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கொலை வழக்கில் தொடர்புடைய இவர் பூந்தமல்லியில் சுதர்சன் என்ற பெயரில் தங்கி வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாஸ்போர்ட் இல்லாமல் தமிழகம் வந்ததாக போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில், இவருக்கு தொடர்புள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடைப்பதாக தெரிகிறது.

banner

Related Stories

Related Stories