தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் செய்தார் திமுக வேட்பாளர் சரவணன் 

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் வேட்னு மனுத்தாக்கல் செய்தார்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் செய்தார் திமுக வேட்பாளர் சரவணன் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது.

இதனையடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் 7ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மே 19ம் தேதி காலியாக உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளான திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூரில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆகையால், அனைத்து தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் மே 23ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்தது.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் செய்தார் திமுக வேட்பாளர் சரவணன் 

இந்நிலையில் 4 தொகுதிகளில் போட்டியிட உள்ள திமுகவின் வேட்பாளர்களையும், தேர்தல் பொறுப்பாளர்களையும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

அதேபோல், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கா கழக வேட்பாளர் மருத்துவர் சரவணனன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்

banner

Related Stories

Related Stories