தமிழ்நாடு

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு பரோல் கோரிய மனு, உள்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு ! 

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பாட்ஷாவுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு பரோல் கோரிய மனு, உள்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு ! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கடந்த 1998ம் ஆண்டு கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் கைதியாக கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல் - உம்மா தலைவர் பாட்ஷாவுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரி அவரது மகள் முபீனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

சிறையில் உதவியாளர் இல்லாமல் எந்த பணிகளையும் செய்ய முடியாத நிலையில் உள்ள தன் தந்தையை கவனித்து சிகிச்சை வழங்கவும், குடும்ப விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கவும், தன் தந்தைக்கு பரோல் வழங்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சத்தியநாரயணன், நீதிபதி நிர்மல்குமார் அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஏப்ரல் 29ம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டிஜிபி, கோவை சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டது.

banner

Related Stories

Related Stories