தமிழ்நாடு

ஐ.பி.எல்.12வது சீசனுக்கான டிக்கெட் விற்பனை 16ஆம் தேதி தொடக்கம்  

ஐ.பி.எல்.12வது சீசனுக்கான டிக்கெட் விற்பனை வரும் 16ஆம் தேதி தொடங்க உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

ipl teams and  their captains
google ipl teams and  their captains
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 23ம் தேதி தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தொடங்கவிருக்கும் இந்த முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

ஏப்ரல் 5ம் தேதி வரையிலான போட்டி அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்னும் இரண்டு தினத்தில் ஐபிஎல்., தொடருக்கான முழு அட்டவணையை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணைப்படி, சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இரண்டு போட்டிகள் நடக்கவுள்ளது.

இதற்கான டிக்கெட் விற்பனை வரும் 16ஆம் தேதி முதல் இணையத்தளம் மூலமும்,மைதான டிக்கெட் கவுண்டர் வாயிலாகவும் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.இந்தப் போட்டிக்கான ஆரம்ப டிக்கெட் விலை ஆயிரத்து 300 ரூபாய் மற்றும் அதிகபட்ச விலை ஆறாயிரத்து 500 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது .ஆன்லைன் மற்றும் கவுண்டர்களில் சென்று வாங்க வேண்டிய டிக்கெட்டுகள், வெவ்வேறு சீட்களுக்கு தகுந்த ரேட்டுகள் என டிக்கெட் விற்பனை ரூ.1300 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இந்த டிக்கெட்டுகள் வரும் மார்ச் 16-ஆம் தேதியில் இருந்து விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் உள்ள டிஎன்சிஏ பாக்ஸ் ஆபீஸில் விற்கப்படவுள்ளன.

கவுண்டர்களைப் பொறுத்தவரை, ஒரு தனி நபருக்கு 2 டிக்கெட்டுகளுக்கு மேல் தரப்படமாட்டாது என்றும், டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும் முதல் நாளான மார்ச் 16-ஆம் தேதி அன்று மட்டும் காலை 11.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை (இடையில் 12.30 மணி முதல் 2 மணி வரை உணவு இடைவேளை) டிக்கெட்டுகள் கொடுக்கப்படவுள்ளன என்றும், அடுத்தடுத்த நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை (இடையில் 12.30 மணி முதல் 2 மணி வரை உணவு இடைவேளை) டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே டிக்கெட்டுகளை புக் மை ஷோ (bookmyshow) இணையதளத்திலும் சென்று புக் செய்துகொள்ளலாம். சென்னை சூப்பர் கிங்ஸின் ஹோம் மேட்சஸ் எனப்படும் தொடக்க ஆட்டங்களை கண்டுகளிப்பதற்கான டிக்கெட் விற்பனை விபரங்களை மட்டுமே தற்போது அறிவித்துள்ளனர். இதர விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது

banner

Related Stories

Related Stories