
19வது ஐபிஎல் சீசன் தொடர் இன்று (மார்ச் 28) முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்கு தொடங்க உள்ளது. நடப்பு சாம்பியன் ஆர்சிபி (RCB) அணியும், முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும் (SRH) நேருக்கு நேர் மோத உள்ளனர். இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டது.
5 மாநில தேர்தல் காரணமாக முதல் கட்ட அட்டவணையை மட்டும் வெளியிட்டிந்த ஐபிஎல் நிர்வாகம், தற்போது தொடர்க்கான முழு அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.
இந்த சீசன் ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டை போலவே 10 அணிகள் களமிறங்குகின்றன. அதன்படி,
1. சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)
2. மும்பை இந்தியன்ஸ் (MI)
3. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)
4. சன்ரைசர்ஸ் ஹைதரபாத் (SRH)
5. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)
6. குஜராத் டைட்டன்ஸ் (GT)
7. பஞ்சாப் கிங்ஸ் (PBKS)
8. டெல்லி கேபிடல்ஸ் (DC)
9. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)
10. ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)
இந்த 10 அணிகளிலும் இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வீரர்களும், வெளிநாட்டு அணிகளைச் சேர்ந்த பிரபலமான வீரர்களும் ஆடுகின்றனர்.
இந்தத் தொடரில் முக்கிய நட்சத்திரங்களும், இளைஞர்களும் சேர்ந்த ஒரு கலவையான ஐபிஎல் தொடராகத்தான் உள்ளது. குறிப்பாக, மகேந்திர சிங் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா, பாண்ட்யா, கே.எல்.ராகுல், ரிஷப்பண்ட் போன்ற மிகப்பெரிய நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அதேபோல், ஜேக்கப் பெத்தேல், ருதுராஜ் கெய்க்வாட், ரஜத் படிதார், ஷிவம் துபே, ரியான் பராக், சாம்சன் போன்ற நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளனர். அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களும், திறமையான இளம் வீரர்களும் இணைந்து விளையாடுவதால் இளம் வீரர்கள் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும்.
கடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு மைதானத்திலும் ரசிகர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆர்சிபி-யின் சொந்த மைதானமான பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மிகவும் பிரபலமான மற்றும் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் ஆட்டங்கள், சென்னையில் நடைபெற உள்ளன. அதன்படி, சென்னையில் நடக்கும் 7 ஹோம் ஆட்டங்களில் ஒன்று மட்டும் மாலை 3.30 மணிக்குத் தொடங்குகிறது. மற்ற 6 போட்டிகளுமே இரவு 7.30 மணிக்குத் தொடங்கும்.
ஏப்ரல் 3 - இரவு 7.30 மணி - சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
ஏப்ரல் 11 - இரவு 7.30 மணி - சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிட்டல்ஸ்
ஏப்ரல் 14 - இரவு 7.30 மணி - சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
மே 2 - இரவு 7.30 மணி - சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
மே 10 - மாலை 3.30 மணி - சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ்
மே 18 - இரவு 7.30 மணி - சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
மே 21 - இரவு 7.30 மணி - சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியூரில் ஆடும் போட்டிகள்:
மார்ச் 30 - இரவு 7.30 மணி - ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கவுகாத்தி
ஏப்ரல் 5 - இரவு 7.30 மணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு
ஏப்ரல் 18 - இரவு 7.30 மணி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - ஹைதராபாத்
ஏப்ரல் 23 - இரவு 7.30 மணி - மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை
ஏப்ரல் 26 - மாலை 3.30 மணி - குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - அகமதாபாத்
மே 5 - இரவு 7.30 மணி - டெல்லி கேபிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி
மே 15 - இரவு 7.30 மணி - லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ
2026 ஐபிஎல் தொடரில் 10 அணிகள் இடம் பெற்றுள்ள நிலையில், 10 அணிகளின் வீரர்களின் பட்டியலை பார்க்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியல் பின்வருமாறு, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), மஹேந்திர சிங் தோனி, சஞ்சு சாம்சன், டெவால் பிரெவிஸ், ஆயுஷ் மாத்ரே, கார்திக் ஷர்மா, சர்ஃபராஸ் கான், உர்வில் பட்டேல், அன்ஷுல் கம்போஜ், ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ணா கோஷ், பிரஷாந்த் வீர், மேத்யூ ஷார்ட், அமன் கான், ஜேக் ஃபோக்ஸ், ஷிவம் துபே, கலீல் அஹமது, நூர் அஹமது, முகேஷ் சௌத்ரி, ஸ்பென்சர் ஜான்சன், ஷ்ரேயாஸ் கோபால், குர்ஜப்னீத் சிங், அகீல் ஹொசைன், மேட் ஹென்றி, ராகுல் சஹர்.
டெல்லி கேபிட்டல்ஸ் அணியில், கேஎல் ராகுல், கருண் நாயர், டேவிட் மில்லர், பென் டக்கெட், பதும் நிசன்கா, சஹில் பராக், பிரித்வி ஷா, அபிஷேக் பொரெல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்ஷர் பட்டேல் (கேப்டன்), சமீர் ரிஸ்வி, அஷுதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், அஜய் மண்டல், திரிபுரணா விஜய், மாதவ் திவாரி, ஆகிப் தார், நித்திஷ் ராணா, மிட்செல் ஸ்டார்க், நடராஜன், முகேஷ் குமார், துஷ்மந்தா சமீரா, லுங்கிசானி எங்கிடி, கைல் ஜேமீசன், குல்தீப் யாதவ்.
குஜராத் டைட்டன்ஸ் அணியில், சுப்மன் கில் (கேப்டன்), ஜாஸ் பட்லர், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், டாம் பேன்டன், கிளென் ஃபிலிப்ஸ், நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், அர்ஷர் கான், ஆர் சாய் கிஷோர், ஜெயந்த் யாதவ், ஜேசன் ஹோல்டன், சாய் சுதர்ஷன், ஷாரூக் கான், ககிஸோ ரபாடா, மொஹம்மது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மானவ் சூதர், குர்னூர் சிங் பிரார், இஷாந்த் ஷர்மா, அஷோக் ஷர்மா, பிரித்வி ராஜ் யார்ரா, லூக் வுட், ராகுல் தெவேதியா, ரஷீத் கான்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ரிங்கு சிங், அங்க்ரிஷ் ரகுவன்ஷி, மனீஷ் பாண்டே, கேமரூன் கிரீன், ஃபின் ஆலன், தேஜஸ்வி சிங், ராகுல் திரிபாதி, டிம் செய்ஃபர்ட், ரோவ்மன் பவெல், அனுகுல் ராய், சர்தக் ரஞ்சன், தக்ஷ் கம்ரா, ரச்சின் ரவீந்திரா, ரமன்தீப் சிங், பிளெஸிங் முசர்பானி, வைபவ் அரோரா, மதீஷா பதிரானா, கார்த்திக் தியாகி, பிரஷாந்த் சோலன்கி, சௌரப் துபே, நவ்தீப் சைனி, உம்ரான் மாலிக், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி.
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியில், ரிஷப் பன்ட் (கேப்டன்), எய்டன் மார்க்ரம், ஹிம்மத் சிங், மேத்யூ பிரீட்ஸ்கி, முகுல் சௌத்ரி, அக்ஷர் ரகுவன்ஷி, ஜாஷ் இங்லிஸ், நிகோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ், அப்துல் சமத், ஷபாஸ் அஹமது, அர்ஷின் குல்கர்னி, வனிந்து ஹசரங்கா, ஆயுஷ் பதோனி, மொஹம்மது ஷமி, ஆவேஷ் கான், சித்தார்த் மணிமாறன், திக்வேஷ் சிங், ஆகாஷ் சிங், பிரின்ஸ் யாதவ், அர்ஜுன் டெண்டுல்கர், ஆன்ரிக் நார்கியா, நமன் திவாரி, மயங்க் யாதவ், மோசின் கான்.
மும்பை இந்தியன்ஸ் அணியில், ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், ராபின் மின்ஸ், ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட், ரயன் ரிக்கில்டன், குவின்டன் டி காக், டேனிஷ் மலேவார், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சேன்ட்னர், ராஜ் அங்கத் பவா, அதர்வா அன்கொலேகர், மயாங் ராவத், கார்பின் பாஷ், வில் ஜேக்ஸ், ஷார்துல் தாக்கூர், டிரென்ட் போல்ட், மயாங்க் மார்கண்டே, தீபக் சஹர், அஷ்வனி குமார், ராகுல் ஷர்மா, மொஹம்மது இஸார், அல்லா கசன்ஃபார், ஜஸ்ப்ரித் பும்ரா.

பஞ்சாப் கிங்ஸ் அணியில், ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, விஷ்ணு வினோத், ஹர்னூர் பன்னு, பைலா அவினாஷ், பிரப்சிம்ரன் சிங், சஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஹர்ப்ரீத் பிரார், மார்கோ யான்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், பிரியான்ஷ் ஆர்யா, முஷீர் கான், சூர்யான்ஷ் செட்கே, மிட்ச் ஓவன், கூப்பர் கானலி, பென் துவார்ஷுய்ஸ், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹல், வைஷாக் விஜயகுமார், யஷ் தாக்கூர், ஜேவியர் பார்ட்லெட், பிரவின் துபே, விஷால் நிஷாத், லாக்கி ஃபெர்குசன்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், ரியான் பராக் (கேப்டன்), ஷுபம் துபே, வைபவ் சூர்யவன்ஷி, டானவன் ஃபெரீரா, லுவான்-ட்ரே பிரிடோரியஸ், ரவி சிங், அமன் ராவ் பெராலா, ஷிம்ரன் ஹிட்மெயர், யஷஷ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல், யுத்விர் சிங் சராக், ரவீந்திர ஜடேஜா, தசுன் ஷனகா, ஜோஃப்ரா ஆர்ச்சர், துஷார் தேஷ்பாண்டீ, க்வேனா மஃபாகா, ரவி பிஷ்னாய், சுஷாந்த் மிஷ்ரா, யஷ் ராஜ் புஞ்ஜா, விக்னேஷ் புத்தூர், பிரிஜேஷ் ஷர்மா, ஆடம் மில்ன், குல்தீப் சென், சந்தீப் ஷர்மா, நாந்த்ரே பர்கர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில், ரஜத் பட்டிதார் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ஃபில் சால்ட், ஜித்தேஷ் ஷர்மா, ஜோர்டன் காக்ஸ், குருனால் பாண்டியா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெபர்ட், ஜேக்கப் பெதெல், வெங்கடேஷ் ஐயர், சர்விக் தேஸ்வால், மங்கேஷ் யாதவ், விக்கி ஓஸ்ட்வால், விஹான் மல்ஹோத்ரா, கனிஷ் சௌஹான், ஜாஷ் ஹேசில்வுட், ராசிக் தார், சுயாஷ் ஷர்மா, புவனேஷ்வர் குமார், நுவான் துசாரா, அபினந்தன் சிங், ஜேக்கப் டஃபி, யஷ் தயால்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில், இஷான் கிஷன், அனிகேஷ் வெர்மா, ஸ்மரன் ரவிச்சந்திரன், சலில் அரோரா, ஹெய்ன்ரிக் கிளாசன், டிராவிஸ் ஹெட், ஹர்ஷல் பட்டேல், கமிந்து மெண்டிஸ், ஹர்ஷ் துபே, பிரைடன் கார்ஸ், ஷிவாங் குமார், கிரெய்ன்ஸ் ஃபுலேட்ரா, லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் பெய்ன், அபிஷேக் ஷர்மா, நித்திஷ் குமார் ரெட்டி, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜீஷன் அன்சாரி, ஜெய்தேவ் உனத்கட், இஷான் மலிங்கா, சாகிப் ஹுசைன், ஓன்கர் டார்மலே, அமித் குமார், பிரஃபுல் ஹிங், ஷிவம் மாவி.
காயம் காரணமாக ஒருசில போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் விளையாட மாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக அணியை இஷான் கிஷன் வழிநடத்துவார் என்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
இந்தத் தொடரில் 70 லீக் போட்டிகள், 2 அரையிறுதி ஆட்டங்கள், 1 எலிமினேட்டர் சுற்று மற்றும் இறுதிப்போட்டி என மொத்தம் 74 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கும் இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.






