விளையாட்டு

சென்னை செஸ் தொடர் : சாம்பியன் பட்டத்தை உறுதி செய்த ஜெர்மனி வீரர்... பிற இந்திய வீரர்களின் நிலை என்ன ?

சென்னை செஸ் தொடர் : சாம்பியன் பட்டத்தை உறுதி செய்த ஜெர்மனி வீரர்... பிற இந்திய வீரர்களின் நிலை என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க கிளாசிக்கல் சதுரங்கப் போட்டியான சென்னை செஸ் கிராண்ட்மாஸ்டர்ஸ் 2025 மூன்றாவது சீசன், சென்னையில் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது.இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து 19 சிறந்த கிராண்ட்மாஸ்டர்கள் மற்றும் ஒரு சர்வதேச மாஸ்டர் பங்கேற்றுள்ள  இந்தப் போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.1 கோடி ஆகும்.

MGD1 ஆல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டி, மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் என இரண்டு பிரிவுகளில் நடைபெறுகிறது. இரு பிரிவிலும் தலா 10 வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்த தொடர் ரவுண்ட்-ராபின் முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் மாஸ்டர்ஸ் பிரிவில் இரண்டு சுற்றுகள் மீதம் உள்ள நிலையில் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார் ஜெர்மனி வீரர் வின்செண்ட் கெய்மெர். இன்னும் ஒரு சுற்று மீதம் உள்ள நிலையில் புள்ளிகள் பட்டியலில் அவருக்கு அடுத்தபடியாக இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி 4.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

சென்னை செஸ் தொடர் : சாம்பியன் பட்டத்தை உறுதி செய்த ஜெர்மனி வீரர்... பிற இந்திய வீரர்களின் நிலை என்ன ?

கடைசி சுற்றில் அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட மற்ற எந்த வீரர்களும் தங்களது ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் வின்சென்ட் கீமரின் புள்ளியை தொட முடியாது என்பதால் வின்செண்ட் கெய்மெர் வெற்றியை உறுதி செய்துள்ளார்.

நாளை கடைசி சுற்று நடைபெறும் நிலையில், இதில் சேலஞ்சர்ஸ் பிரிவில் பட்டம் வெல்வதில் எம்.பிரனேஷ், அபிமன்யு புராணிக், லியோன் லூக் மென்டோன்கா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பிரனேஷ்  6.5 புள்ளிகளுடனும், அபிமன்யு புராணிக், லியோன் லூக் மென்டோன்கா ஆகியோர் தலா 6 புள்ளிகளுடனும் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

8 சுற்றுகளின் முடிவில் மாஸ்டர்ஸ் பிரிவு புள்ளிகள் பட்டியல்:

1. வின்சென்ட் கீமர் - 6

2. அர்ஜுன் எரிகைசி - 4.5

2. முரளி கார்த்திக்கேயன் - 4.5

4. அனிஷ் கிரி - 4

4. ஜோர்டான் வான் பாரஸ்ட் - 4

4. அவோண்டர் லியாங் - 4

7. விதித் குஜ்ராத்தி - 3.5

7. நிஹால் சரின் - 3.5

9. வி.பிரணவ் - 3

9. ரே ராப்சன் - 3 

8 சுற்றுகளின் முடிவில் சேலஞ்சர்ஸ் பிரிவு புள்ளிகள் பட்டியல்:

1. எம்.பிரனேஷ் - 6.5

2. அபிமன்யு புராணிக் - 6

2. லியோன் லூக் மென்டோன்கா - 6

4. அதிபன் பாஸ்கரன் - 5

5. பா.இனியன் - 4.5

6. திப்தாயன் கோஷ் - 3.5

7. ஆர்யன் சோப்ரா - 3

7. ஜி.பி.ஹர்ஷ்வர்தன் - 3

9.  ஹரிகா துரோணவல்லி - 1.5

10. ஆர்.வைஷாலி - 1

banner

Related Stories

Related Stories