விளையாட்டு

ரூ.4,923 கோடி ஊதியம் : ரொனால்டோவை இரண்டு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்த சவுதி அணி... விவரம் உள்ளே !

ரூ.4,923 கோடி ஊதியம் : ரொனால்டோவை இரண்டு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்த சவுதி அணி... விவரம் உள்ளே !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ ஐரோப்பிய கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து விலகிய பின்னர் சவுதி அரேபியா கால்பந்து கிளப்பான அல் நாசர் அணியில் இரண்டு ஆண்டுகள் விளையாட ஓப்பந்தமானார்.

அவரை அல் நாசர் அணி ஆண்டுக்கு சுமார் 1,700 கோடி ரூபாய் என்ற மிக பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்தது. ரொனால்டோவின் அந்த ஒப்பந்தம் 2025- ஆம் ஆண்டு வரை தொடரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டோடு அந்த ஒப்பந்தம் முடிவுக்கு வரவுள்ளது.

ரூ.4,923 கோடி ஊதியம் : ரொனால்டோவை இரண்டு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்த சவுதி அணி... விவரம் உள்ளே !

இதனால் அவர் அதே அணியில் தொடருவாரா அல்லது வேறு அணிக்கு செல்வாரா என்ற கேள்வி எழுந்தது. மேலும் அவர் ஓய்வு பெறப்போவதாகவும் தகவல் பரவியது. இந்த நிலையில், அல் நாசர் அணி ரொனால்டோவை மேலும் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதன் படி வரும் 2027-ம் ஆண்டு வரை ரொனால்டோ அல் நாசர் அணியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளில் ரொனால்டோ ரூ.4,923 கோடி ஊதியமாக பெறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories