விளையாட்டு

7 ஆண்டுகளுக்கு பிறகு ஹாக்கி இந்தியா லீக் போட்டி... 8 ஆண்கள் அணி, 6 பெண்கள் அணி பங்கேற்பு !

அடுத்து நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்தில் இருந்து வீரர்கள் வருவார்கள் என்று தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் தலைவரும், ஹாக்கி இந்தியா பொருளாளருமான சேகர் மனோகரன் பேட்டியளித்துள்ளார்.

7 ஆண்டுகளுக்கு பிறகு ஹாக்கி இந்தியா லீக் போட்டி... 8 ஆண்கள் அணி, 6 பெண்கள் அணி பங்கேற்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஹாக்கி இந்தியா லீக்கில் விளையாட உள்ள தமிழ்நாடு டிராகன்ஸ் அணியின் அறிமுக விழா, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் இன்று (டிச.19) நடைபெற்றது. இந்த விழாவில் அணியின் இலட்சினையும், அணிக்கான ஜெர்சியும் வெளியிடப்பட்டது. இந்த போட்டியானது, டிசம்பர் 28 தொடங்கி 2025 பிப்ரவரி 1ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது.

2015 முதல் 2017 வரை ஹாக்கி இந்தியா லீக் தொடர் நடைபெற்றது. அதற்குப் பிறகு இந்தத் தொடர் நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி தொடங்குகிறது. 7ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற லீக் தொடரில் ஆண்களுக்கான அணிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு நடைபெறும் தொடரில் 8 ஆண்கள் அணியும், 6 பெண்கள் அணியும் பங்கேற்கிறது.

7 ஆண்டுகளுக்கு பிறகு ஹாக்கி இந்தியா லீக் போட்டி... 8 ஆண்கள் அணி, 6 பெண்கள் அணி பங்கேற்பு !

ஆண்கள் அணிகளை பொறுத்த வரை சென்னை, லக்னோ, பஞ்சாப், மேற்கு வங்கம், டெல்லி, ஒடிசா, ஹைதராபாத், ராஞ்சி ஆகிய எட்டு அணிகள் கலந்து கொள்கின்றன.

HIL (Hockey India League) 2024-25 டிசம்பர் 28 ஆம் தேதி தொடங்கும், தொடக்க விழா ரூர்கேலாவில் நடைபெற உள்ளது. HIL 2024-25 போட்டிகள் ராஞ்சியில் உள்ள மரங் கோம்கே ஜெய்பால் சிங் ஆஸ்ட்ரோடர்ஃப் ஹாக்கி ஸ்டேடியம், ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவின் ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா ஹாக்கி ஸ்டேடியம் ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது.

7 ஆண்டுகளுக்கு பிறகு ஹாக்கி இந்தியா லீக் போட்டி... 8 ஆண்கள் அணி, 6 பெண்கள் அணி பங்கேற்பு !

தமிழ்நாடு டிராகன்ஸ் அணியின் அறிமுக நிகழ்வில் தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் தலைவரும், ஹாக்கி இந்தியா பொருளாளருமான சேகர் மனோகரன் பேசியதாவது,

முதலில் ஹாக்கி லீக் தான் தொடங்கியது. பிறகு தான் ஐபிஎல், ப்ரோ கபடி போன்றவை வந்தது. ஆனால் ஏழு வருடங்கள் இடைவெளி ஏற்பட்டு விட்டது. தற்போது மீண்டும் வந்தபோது தமிழக அணியை எடுக்க யாரும் முன்வரவில்லை என்று கஷ்டமாக இருந்தது. அந்த நேரத்தில் தான் சால்ஸ் முன்வந்து ஏலத்தில் எடுக்க சம்மதம் தெரிவித்தார்.

ஹாக்கியில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த இரண்டு ஒலிம்பிக் தொடரில் வெண்கலம் வென்றுள்ளோம். அதுமட்டுமல்லாமல் இந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு தங்கங்களை வென்றுள்ளோம். உலகில் எல்லா இடங்களிலும் திரும்பிப் பார்க்க கூடிய இடத்தில் ஹாக்கி பிரம்மாண்டமாக இருக்கிறது.

170 வெளிநாட்டு வீரர்கள், 600 இந்திய வீரர்கள் இந்த ஏலத்தில் கலந்துகொள்ள பதிவு செய்தார்கள். ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களை விட இந்திய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டர்கள். இது நமக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம்.

தமிழ்நாடு டிராகன்ஸ் அணியில் தமிழக வீரர்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். 6 தமிழக வீரர்கள் உள்ளார்கள். இது அவர்களுக்கு கிடைக்கக் கூடிய மிகச் சிறப்பான வாய்ப்பு. தமிழகத்தைச் சேர்ந்த சார்ஸ் டிக்கன்ஸ் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறந்த அணியை உருவாக்கியுள்ளோம்.

7 ஆண்டுகளுக்கு பிறகு ஹாக்கி இந்தியா லீக் போட்டி... 8 ஆண்கள் அணி, 6 பெண்கள் அணி பங்கேற்பு !

இது ஒரு அணியாக மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஒரு அகாடமி போன்று இது செயல்பட வேண்டும். தமிழகத்திலிருந்து நிறைய வீரர்களை உருவாக்க அடிமட்ட அளவில் இருந்து தகுதியுள்ள வீரர்களை தேர்வு செய்து அவர்களை தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்கு தேர்வு செய்ய சால்ஸ் குழுமம் உதவ வேண்டும்.

தொடர்ந்து அவர்களின் தமிழ்நாடு அணியில் கொண்டு வர வேண்டும் இந்திய அணிக்கான முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டும், தொடர்ந்து அவர்கள் ஒலிம்பிக்கிற்கு செல்ல வேண்டும். இதுபோன்று லீக் என்பதை தாண்டி செயல்பட வேண்டும்.

அடுத்த ஒலிம்பிக் செல்லும் அணியில் இந்த அணியில் இருந்து செல்லக் கூடியவர்கள் இருப்பார்கள் என்று நம்புகிறேன். ஹாக்கி இந்தியா லீக்கில் ஆடுகிற அணிகளில் சிறந்த அணியாக இது உள்ளது. அடுத்து நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்தில் இருந்து வீரர்கள் வருவார்கள்.

நாம் தற்போது நியமித்திருக்கக்கூடிய பயிற்சியாளர் மிகச் சிறந்தவர். தங்கம் வென்ற ஜெர்மனியின் ஜூனியர் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டவர். அணிக்கான உதவியாளர்களை தேடி தேடி தேர்வு செய்துள்ளோம்.

பயிற்சியாளர்களுக்கு முதலில் பயிற்சி அளித்த பிறகு, பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டு இருக்கிறோம். ஒலிம்பிக் வென்ற அணியில் இருந்தவர்கள் உட்பட மிகச்சிறந்த வீரர்களை அணிக்கு தேர்வு செய்துள்ளோம். கண்டிப்பாக இந்த அணி கோப்பையை வெல்லும்." என்றார்.

banner

Related Stories

Related Stories