விளையாட்டு

கத்துக்குட்டியிடம் வீழ்ந்த பெல்ஜியம் : EURO கால்பந்து தொடரின் முதல் அதிர்ச்சி... முழு விவரம் என்ன ?

கத்துக்குட்டியிடம் வீழ்ந்த பெல்ஜியம் : EURO  கால்பந்து தொடரின் முதல் அதிர்ச்சி... முழு விவரம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கிரிக்கெட்டில் உலககோப்பைக்கு பின்னர் எப்படி ஆசிய கோப்பை தொடர் மிகமுக்கியத்துவம் வாய்ந்த தொடராக கருதப்படுகிறதோ, அதே போல கால்பந்தில் உலககோப்பைக்கு பின்னர் யூரோ கோப்பை தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி என உலககோப்பைகளை வென்ற அணிகளும், பெல்ஜியம், போர்த்துக்கல், நெதர்லாந்து, குரோஷியா போன்ற வலுவான அணிகளும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதால் இந்த தொடர் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களால் கொண்டாடபடுகிறது.

தற்போது யூரோ கோப்பை தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் ஜெர்மனி அணி ஸ்காட்லாந்து அணியை வீழ்த்திய நிலையில், ஸ்பெயின் அணி வலுவான குரோஷியாவை வீழ்த்தியது. மேலும், இங்கிலாந்து, இத்தாலி , நெதர்லாந்து போன்ற முக்கிய அணிகள் தங்கள் முதல் ஆட்டத்தில் வென்று தொடரை சிறப்பாக தொடங்கியுள்ளன.

கத்துக்குட்டியிடம் வீழ்ந்த பெல்ஜியம் : EURO  கால்பந்து தொடரின் முதல் அதிர்ச்சி... முழு விவரம் என்ன ?

இந்த சூழலில் நேற்று நடைபெற்ற போட்டியில் உலக தரவரிசையில் 3-ம் இடம் வகிக்கும் பெல்ஜியம் அணி தரவரிசையில் 48-வது இடத்தில் உள்ள ஸ்லோவாக்கியா அணியை சந்தித்தது. இதில் அனைவரும் பெல்ஜியம் எளிதாக வெற்றிபெறும் என்று எண்ணிக்கொண்டிருந்த நிலையில், ஆட்டத்தின் 7 -வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் டோகு செய்த தவறால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய ஸ்லோவாக்கியா வீரர் இவான் கோலடித்து அசத்தினார்.

அதனைத் தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளை பெல்ஜியம் அணியின் நட்சத்திர வீரர் லுகாகு வீணடித்தார். தொடர்ந்து அவர் அடித்த இரண்டு கோல்களில் ஒன்று ஆஃப் சைடு என்றும், மற்றொன்று ஹாண்ட் பால் என்றும் உறுதிசெய்யப்பட்டு கோல் நிராகரிக்கப்பட்டது. இறுதியில் ஸ்லோவாக்கியா அணி 1-0 என்ற கணக்கில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி யூரோ தொடரின் முதல் அதிர்ச்சி தோல்வியை நிகழ்த்தியது.

banner

Related Stories

Related Stories