விளையாட்டு

"உலகில் உங்களது புகழ் என்றென்றும் ஜொலிக்கும்"- தினேஷ் கார்த்திக்குக்கு வாழ்த்து தெரிவித்த நடராஜன் !

கிரிக்கெட் வீரர் நடராஜன் தினேஷ் கார்த்திக்குக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

"உலகில் உங்களது புகழ் என்றென்றும் ஜொலிக்கும்"- தினேஷ் கார்த்திக்குக்கு வாழ்த்து தெரிவித்த நடராஜன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அணியில் இடம்பெறாத காரணத்தால் வர்ணனையாளராக செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.

ஆனால் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக பினிஷராக செயல்பட்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக அடுத்து வந்த 2022-ம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றார்.பின்னர் தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் இடம்பிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

எனினும் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் தோல்வியைத் தழுவி தொடரில் பெங்களூரு அணியில் இருந்து வெளியேறியது.அதனைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக் தான் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து மைதானத்தை வலம்வந்து ரசிகர்களின் பிரியாவிடையை ஏற்றுக்கொண்டார்.

"உலகில் உங்களது புகழ் என்றென்றும் ஜொலிக்கும்"- தினேஷ் கார்த்திக்குக்கு வாழ்த்து தெரிவித்த நடராஜன் !

அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்களும் தினேஷ் கார்த்திக்குக்கு வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் கிரிக்கெட் வீரர் நடராஜன் தினேஷ் கார்த்திக்குக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

தினேஷ் கார்த்திக் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடராஜன் , "உங்களோடு இணைந்து விளையாடி, உங்களது சிறப்பான கிரிக்கெட் பயணத்தை அருகிலிருந்து பார்த்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்.

எண்ணற்ற நினைவுகளை வழங்கி, சிறப்பான ஆலோசகராகவும், சக வீரராகவும் இருந்ததற்கு மிக்க நன்றி அண்ணா! கிரிக்கெட் உலகில் உங்களது புகழ் என்றென்றும் ஜொலிக்கும். ஓய்வுக்குப் பிறகு நீங்கள் செய்யும் விஷயங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories