விளையாட்டு

IPL இறுதிப்போட்டியில் KKRvs SRH அணிகள் இன்று பலப்பரீட்சை : பாதுகாப்பு பணியில் 2,500 போலீஸார் !

IPL இறுதிப்போட்டியில் KKRvs SRH அணிகள் இன்று பலப்பரீட்சை : பாதுகாப்பு பணியில் 2,500 போலீஸார் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் விருந்து படைத்து வந்த ஐபிஎல் 2024 ஆம் ஆண்டின் இறுதிப்போட்டி இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் தகுதி பெற்றன.

இதில் இறுதிப்போட்டிக்கு முன்னாள் சாம்பியங்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் முன்னேறின. இந்த இறுதிப்போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

IPL இறுதிப்போட்டியில் KKRvs SRH அணிகள் இன்று பலப்பரீட்சை : பாதுகாப்பு பணியில் 2,500 போலீஸார் !

இதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி 2500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதில் 2000 சட்ட ஒழுங்கு போலீசார் மற்றும் 620 போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணியில் அமர்த்த பட்டுள்ளனர்...

இறுதிப் போட்டியை காண கொல்கத்தா, ஐதராபாத் அணிகளின் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ரசிகர்கள் ஏராளமானோர் சென்னையில் குவிந்துள்ளனர் இதனை அடுத்து பாதுகாப்பு பணிகள் தீவிரப் படுத்த பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories