விளையாட்டு

"கொல்கத்தா அணியின் கேப்டனாக இதுதான் எனது வருத்தம்" - கவுதம் காம்பிர் கூறியது என்ன ?

சூரியகுமாரின் திறமையை சரியாக பயன்படுத்திக் கொள்ளாததுதான் எனது ஒரே வருத்தம் என கவுதம் காம்பிர் கூறியுள்ளார்.

"கொல்கத்தா அணியின் கேப்டனாக இதுதான் எனது வருத்தம்" - கவுதம் காம்பிர் கூறியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சமீப காலமாக இந்திய அணியின் தவிர்க்கமுடியாத வீரராக முன்னேறியுள்ளார் சூரியகுமார் . இந்தியாவின் 360 டிகிரி, இந்தியாவின் ஏபி டிவிலியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். இந்திய அணியின் முக்கிய வெற்றிகளுக்கு காரணமாகவும் திகழ்ந்து வருகிறார்.

கடந்த சில வருடத்தில் டி20 ஃபார்மட் போட்டிகளில் இந்தியாவின் மிகச் சிறந்த வீரராக அவரே விளங்கி வருகிறார். ஒரு ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி சர்வதேச டி20 தரவரிசையில் முதலிடத்தையும் பிடித்து அசத்தியுள்ளார். அடுத்ததாக நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள சூரியகுமார் அங்கும் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்வார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

"கொல்கத்தா அணியின் கேப்டனாக இதுதான் எனது வருத்தம்" - கவுதம் காம்பிர் கூறியது என்ன ?

இந்த நிலையில், சூரியகுமாரின் திறமையை சரியாக பயன்படுத்திக் கொள்ளாததுதான் எனது ஒரே வருத்தம் என கவுதம் காம்பிர் கூறியுள்ளார். சூரியகுமார் முதலில் கவுதம் காம்பிரின் கீழ் கொல்கத்தா அணியில் ஆடினார். ஆனால் அவருக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்படாத நிலையில், மும்பை அணி அவருக்கு வாய்ப்பளித்து அவரின் திறமையை வெளிக்கொண்டு வந்தது.

இதனை குறிப்பிட்டு பேசிய சூரியகுமார், " ஒரு கேப்டனின் முக்கிய பங்கு தமது வீரர்களின் திறமையை வெளி கொண்டுவருவதே. கொல்கத்தா அணிக்காக என்னுடைய ஏழு வருட கேப்டன் பொறுப்பில் நான் வருத்தப்படக்கூடிய ஒரு விஷயம் இருந்தால், அது நானும் அணியும் சேர்ந்து சூரியகுமாரின் திறமையை சரியாக பயன்படுத்திக் கொள்ளாததுதான் என்று கூறலாம். காரணம் அணியின் காம்பினேஷன் அப்படி இருந்தது.

சூரியகுமார் யாதவ் பேட்டிங் வரிசையில் மூன்றாம் இடத்தில் மிகவும் திறமையானவராக இருந்திருக்க முடியும் என்றாலும், அவருக்கு என்னால் ஏழாம் இடம் மட்டுமே கொடுக்க முடிந்தது.சூரியகுமார் யாதவ் ஒரு வடிவ கிரிக்கெட்டுக்கான வீரர் என்பதில் திருப்தி அடைய கூடாது. அவருக்கு எல்லா வடிவ கிரிக்கெட்டிலும் சிறந்து விளங்கும் திறமை இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories