விளையாட்டு

பேட்டிங்கில் சொதப்பிய CSK : பஞ்சாப் அணி அபார வெற்றி... சென்னையில் பிளே ஆஃப் வாய்ப்புக்கு சிக்கல் !

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி.

பேட்டிங்கில் சொதப்பிய CSK : பஞ்சாப் அணி அபார வெற்றி... சென்னையில் பிளே ஆஃப் வாய்ப்புக்கு சிக்கல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2024 ஆம் ஆண்டின் 17 ஆவது ஐபிஎல் தொடர் சென்ற மார்ச் மாதம் 22 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 49 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களம் இறங்கிய சென்னை அணிக்கு துவக்க ஆட்டகாரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரஹானே களம் இறங்கினர். ரஹானே 29 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

கேப்டன் ருதுராஜ் மட்டும் நிலைத்து நின்று ஆட, அடுத்து வந்த ஜடேஜா, டுபே,ரிஸ்வி, ஆகியோர் சொற்ப ரன்ங்களில் ஆட்டமிழந்து வெளியேற இறுதியில் சென்னை அணி இருபது ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதில் கேப்டன் ருதுராஜ் அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி தரப்பில் ராகுல் சஹர் மற்றும் பரார் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பேட்டிங்கில் சொதப்பிய CSK : பஞ்சாப் அணி அபார வெற்றி... சென்னையில் பிளே ஆஃப் வாய்ப்புக்கு சிக்கல் !

பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக பிரப்சிம்ரன் சிங்- ஜானி பெயர்ஸ்டோ களம் இறங்கினர். பிரப் சிம்ரன் சிங் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, அதன் பின் களமிறங்கிய ரோஷோவ் பெயர்ஸ்டோ சிறப்பாக விளையாடினார்.

பஞ்சாப் அணி வெற்றியை நெருங்கும்போது பெயர்ஸ்டா 46 ரன்ங்களிலும் ரோஷோவ் 43 ரன்ங்களிலும் ஆட்டம் இழக்க அடுத்து வந்த சசான் சிங் சாம்கரன் ஆகியோர் பஞ்சாப் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியில் பஞ்சாப் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வி்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சாம் கரன் 26 ரன்களுடனும் சாசான் சிங் 25 ரன்ங்களுடனும் ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தனர். சென்னை அணி தரப்பில் தாகூர்,துபே மற்றும் கிளஸ்சென் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

banner

Related Stories

Related Stories