விளையாட்டு

ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக அதிருப்தி : INSTA-வில் பகிர்ந்த மூத்த மும்பை அணி வீரர் !

மும்பை அணி வீரர் முகமது நபி ஹர்திக் பாண்டியாவுக்கு எதிரான அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக அதிருப்தி : INSTA-வில் பகிர்ந்த மூத்த மும்பை அணி வீரர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் பரிமாற்ற முறையில் குஜராத் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வளம்வந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், மும்பை அணிக்கு வந்ததும் கேப்டனாக்கப்பட்டதால் அந்த அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, சூரியகுமார், பும்ரா ஆகியோர் ஹர்தீக் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், மும்பை அணி வீரர் முகமது நபி பாண்டியாவுக்கு எதிரான அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் மும்பை அணி வெற்றிபெற்றது. இந்த போட்டிக்கான மும்பை அணியில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபியும் இடம்பெற்றிருந்தார். மூத்த வீரரான அவருக்கு கடைசி வரை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச வாய்ப்பு அளிக்கவில்லை.

ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக அதிருப்தி : INSTA-வில் பகிர்ந்த மூத்த மும்பை அணி வீரர் !

முகமது நபிக்கு பந்துவீச வாய்ப்பு கொடுத்தது குறித்து இன்ஸ்டாகிராமில் ஆப்கானிஸ்தான் ரசிகர் ஒருவர், "கேப்டன்களின் சில முடிவுகள் மிகவும் விசித்திரமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. இன்று நபி பந்து வீசவே இல்லை. இவர் ஆட்டத்தை மாற்றக் கூடியவர்"என்று கூறியிருந்தார்.

ரசிகரின் அந்த பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் முகமது நபி பகிர்ந்து இருந்தார். இதனைத் தொடர்ந்து மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீது முகமது நபி திருப்தியாக இருக்கிறார் என்றும், அதனைத்தான் வெளிப்படுத்தியுள்ளார் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

banner

Related Stories

Related Stories