அரசியல்

மோடி கலந்துகொண்ட கூட்டத்தில் பங்கேற்காத நிதிஷ்குமார் : புறக்கணிக்கிறாரா ? புறக்கணிக்கப்படுகிறாரா ?

பீகாரில் பிரதமர் மோடியின் பிரச்சார மேடைகளில் நிதிஷ்குமார் பங்கேற்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மோடி கலந்துகொண்ட கூட்டத்தில் பங்கேற்காத நிதிஷ்குமார் : புறக்கணிக்கிறாரா ? புறக்கணிக்கப்படுகிறாரா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பீகாரில் 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடன் கைக்கோர்த்து சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி (ஜே.டி.யு). இந்த தேர்தல் அறிவிப்பு வந்ததில் இருந்தே பா.ஜ.கவுக்கும், ஜே.டி.யு கட்சிக்கும் இடையே தொகுதி ஒதுக்கீடு செய்வதில் பிரச்சனை எழுந்தது. இருப்பினும் கூட்டணி உடையாமல் பா.ஜ.க தலைமை பார்த்துக் கொண்டது.

இந்த தேர்தலில் பா.ஜ.க, ஜே.டி.யு கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் நிதிஷ்குமாரால் 43 இடங்களை மட்டுமே பெற முடிந்த நிலையில் பா.ஜ.கவும் 74 இடங்களில் வெற்றி பெற்றது.எனினும் மீண்டும் நிதிஷ்குமாரை முதல்வராக்க பா.ஜ.க ஒத்துக் கொண்டது. மேலும் பா.ஜ.க துணை முதல்வர் பதவியை பெற்றுக் கொண்டது .இதில் இருந்தே பா.ஜ.கவுக்கும், ஜே.டி.யு கட்சிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து கடந்த 2022- ம் ஆண்டு பாஜகவுடனான கூட்டணி முறிந்துவிட்டது என்று நிதிஷ்குமார் அறிவித்து பீகார் முதலமைச்சர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார். அதன்பின்னர் நிதிஷ் குமார் லாலு பிரசாத் யாதவ்வின் ஆர்.ஜே.டி, காங்கிரஸ், இடதுசாரிகளுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்தார். இந்த கூட்டணியின் முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக லாலு பிரசாத் யாதவ்வின் மகன் தேஜஸ்வி யாதவ்வும் பதவியேற்றனர்.

மோடி கலந்துகொண்ட கூட்டத்தில் பங்கேற்காத நிதிஷ்குமார் : புறக்கணிக்கிறாரா ? புறக்கணிக்கப்படுகிறாரா ?

ஆனால், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் மீண்டும் கூட்டணி மாறி பா.ஜ.க.வோடு இணைந்து அக்கட்சியின் ஆதரவோடு முதல்வராக பொறுப்பேற்றார். தற்போது நாடாளுமன்ற தேர்தலை பா.ஜ.க.வும் ஜே.டி.யுயும் கூட்டணி அமைத்து சந்திக்கிறது. ஆனால், பீகாரில் பிரதமர் மோடியின் பிரச்சார மேடைகளில் நிதிஷ்குமார் பங்கேற்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 7 ஆம் தேதி பீகாரின் நவடா பகுதியில் நடந்த கூட்டத்தில் மோடியுடன் நிதிஷ்குமார் பங்கேற்றார். அதன்பின்னர் மோடி பீகாரில் கலந்துகொண்ட எந்த கூட்டத்திலும் நிதிஷ்குமார் கலந்துகொள்ளவில்லை. இது மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories