விளையாட்டு

அடுத்த ஆண்டு முக்கிய IPL அணிக்கு தலைமை தாங்கவுள்ளாரா ரோகித் சர்மா ? - ட்ரெண்டாகும் வீடியோ !

மும்பை அணி நிர்வாகத்திஜும் செயலால் அதிருப்தி அடைந்த ரோஹித் ஷர்மா இந்த ஆண்டோடு மும்பை அணியிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு முக்கிய IPL அணிக்கு தலைமை தாங்கவுள்ளாரா ரோகித் சர்மா ? - ட்ரெண்டாகும் வீடியோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் பரிமாற்ற முறையில் குஜராத் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வளன்வந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மும்பை அணிக்கு வந்ததும் கேப்டனாக்கப்பட்டதால் அந்த அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, சூரியகுமார், பும்ரா ஆகியோர் ஹர்தீக் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. மேலும், ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்களும் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற குஜராத் - மும்பை அணிகளுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் கிண்டல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போட்டி தொடங்கும் நேரத்தில், ஒலிபெருக்கியில் ஹர்திக் பாண்டியாவின் பெயர் அறிவிக்கப்பட்டபோது ரசிகர்கள் பூ என கிண்டல் செய்யும் விதமாக கோஷமெழுப்பினர்.

அப்போது இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி ஹர்திக் பாண்டியா மும்பைக்கு வரும்போது இன்னும் அதிகமாக கிண்டல் செய்யப்படுவார் என கூறியிருந்தார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக மும்பை அணியின் சொந்த மைதானமான வான்கடேவில் நடைபெற்ற போட்டியில் சொந்த அணியின் ரசிகர்களாலேயே ஹர்திக் பாண்டியா கிண்டலுக்கு உள்ளாகினார்.

இந்த நிலையில், மும்பை அணி நிர்வாகத்திஜும் செயலால் அதிருப்தி அடைந்த ரோஹித் ஷர்மா இந்த ஆண்டோடு மும்பை அணியிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அடுத்த சீசனில் ரோஹித் சர்மா கொல்கத்தா அணிக்கு தலைமை தாங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ரோதித சர்மா முன்னர் மும்பை அணிக்கு பின்னர் கொல்கத்தா அணிக்கு தலைமை தாங்க விரும்புவதாக கூறியிருந்தார். அந்த வீடியோவை ட்ரெண்ட் செய்துள்ள ரசிகரகள், அடுத்த ஆண்டு ரோகித் சர்மா கொல்கத்தா அணிக்கு தலைமை தாங்கவுள்ளதாக கூறிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் மும்பை அணியின் தொடர் தோல்வி காரணமாக மீண்டும் கேப்டனாகும் படி மும்பை அணி நிர்வாகம் ரோகித் சர்மாவை அணுகியதாகவும், ஆனால் அதனை ரோதித் மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories