விளையாட்டு

"பதினாறு ஆண்டுகளாக பெங்களூரு அணியின் கதை இதுதான்" - அம்பதி ராயுடு கூறியது என்ன ?

மூத்த வீரர்கள் விரைவில் ஆட்டமிழப்பதே பதினாறு ஆண்டுகளாக பெங்களூரு அணியின் கதையாக இருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு விமர்சித்துள்ளார்.

"பதினாறு ஆண்டுகளாக பெங்களூரு அணியின் கதை இதுதான்" - அம்பதி ராயுடு கூறியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஐபிஎல் தொடரில் தலா 5 கோப்பைகளை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் வெற்றிகரமான அணிகளாக திகழ்கிறது. இந்த இரு அணிகளுக்கும் உலகம் முழுவம் ஏராளமான ரசிகர்களும் இருந்து வருகிறது. இதனால் ஐபிஎல் தொடரில் சிறந்த அணிகளாக இவை கருதப்படுகின்றன.

அதே நேரம் ஐபிஎல் தொடரின் முக்கிய அணிகளில் ஒன்றாக திகழும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16 ஆண்டுகள் ஆடியும், ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத அணியாக உள்ளது. ஆனாலும், அதன் ரசிகர்கள் பலம் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இணையாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு முறையில் பேட்டிங்கில் சிறப்பாக அணியாக களம்காணும் பெங்களூரு அணி பந்துவீச்சில் சொதப்பும் அணியாகவே காலகாலமாக வலம்வருகிறது. இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கு இல்லாமல் பந்துவீச்சில் சொதப்பி மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து, தற்போது புள்ளிப் பட்டியலில் 9-வது இடத்தில் நீடிக்கிறது.

"பதினாறு ஆண்டுகளாக பெங்களூரு அணியின் கதை இதுதான்" - அம்பதி ராயுடு கூறியது என்ன ?

இந்த நிலையில், மூத்த வீரர்கள் விரைவில் ஆட்டமிழப்பதே பதினாறு ஆண்டுகளாக பெங்களூரு அணியின் கதையாக இருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், " பெங்களூரு அணி சிறப்பான பேட்டிங் அணியாகத்தான் தெரியும். ஆனால், அழுத்தத்தில் அவ்வணியின் பெரிய பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக விளையாடுவதைப் பார்க்க முடியாது. மேல் வரிசையில் ஆடும் பெரிய வீரர்கள் எல்லோரும் விரைவில் ஆட்டமிழந்துவிடுவர்.

அதே நேரம் அந்த அணியில் எப்போதும் இளம்வீரர்கள் கீழ் வரிசையில்தான் விளையாடுவார்கள். இப்படியிருந்தால் அந்த அணி வெற்றி பெறாது. அணியில் இருக்கும் பெரிய பேட்ஸ்மேன்கள்தான் இந்த அழுத்தத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அந்த தருணத்தில் மூத்த வீரர்கள் ஆட்டமிழந்து ஓய்வறையில்தான் இருப்பார்கள். இதுதான் பதினாறு ஆண்டுகளாக பெங்களூரு அணியின் கதையாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories