விளையாட்டு

"வேகத்துக்கு எதிராக தடுமாறக்கூடிய அணியாக இந்தியா இல்லை" - INDvsAUS தொடர் குறித்து அஸ்வின் கூறியது என்ன ?

இம்முறை வேகத்துக்கு எதிராக தடுமாறக்கூடிய அணியாக இந்தியா இல்லை என இந்திய வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.

"வேகத்துக்கு எதிராக தடுமாறக்கூடிய அணியாக இந்தியா இல்லை" - INDvsAUS தொடர் குறித்து அஸ்வின் கூறியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று அங்கு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. பார்டர் - கவாஸ்கர் கோப்பை என அறியப்பட்ட இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்தது. இதில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் -அவுட் ஆனது. அதோடு முதல் போட்டியில் படுதோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியோடு இந்திய கேப்டன் கோலி நாடு திரும்பிய நிலையில், ரஹானே கேப்டனாக பொறுப்பேற்றார். மெல்பர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் காயத்தோடு அஸ்வின் - விஹாரி இணை போராடி போட்டியை டிரா செய்தது.

அடுத்ததாக காபாவில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இளம்வீரர்கள் அடங்கிய இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்ற அசத்தியது. அடுத்ததாக இந்த ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.

"வேகத்துக்கு எதிராக தடுமாறக்கூடிய அணியாக இந்தியா இல்லை" - INDvsAUS தொடர் குறித்து அஸ்வின் கூறியது என்ன ?

இந்த தொடர் குறித்து பேசிய இந்திய அணி வீரர் அஸ்வின், " இம்முறை வேகத்துக்கு எதிராக தடுமாறக்கூடிய அணியாக இந்தியா இல்லை. இந்திய வீரர்கள் ஹெல்மெட்டில் சில அடி வாங்கினாலும் அதை எதிர்கொள்ளும் வீரர்களாக எங்கள் அணி வீரர்கள் வந்துள்ளதை நான் பார்த்துள்ளேன். அதனாலயே இந்தியா வெளிநாடுகளில் நல்ல முடிவுகளையும் கொடுத்து வருகிறது.

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில், முதல் போட்டியில் தோற்றாலும் இரண்டாவது போட்டியில் வென்றோம். அதுவே நாங்கள் சிறப்பாக ஆடி வருவதற்கான அறிகுறியாகும். மிகவும் கடினமான கிரிக்கெட்டை விளையாடக்கூடிய ஆஸ்திரேலியா இம்முறை எங்களை வீழ்த்த காத்திருப்பார்கள். எங்கள் அணியில் சற்று அனுபவமின்மை இருக்கிறது என்பது உண்மைதான் . ஆனால் வேகத்தை எதிர்கொள்வதற்கான வீரர்கள் எங்களிடம் வந்துள்ளதாக நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories