விளையாட்டு

உலகக்கோப்பைக்கு கோலி தேவையில்லை என்பதை கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கின்றது - ஆரோன் பின்ச் காட்டம் !

உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி தேவையில்லை என்ற பேச்சுகள் எல்லாம் வேடிக்கையாக இருக்கின்றன என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் கூறியுள்ளார்.

உலகக்கோப்பைக்கு கோலி தேவையில்லை என்பதை கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கின்றது - ஆரோன் பின்ச் காட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து டி20 அணியில் இதனால் இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மாவின் டி20 பயணம் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.

ஆனால், அவர்களின் டி20 பயணம் குறித்து அவர்களே முடிவே செய்துகொள்ளலாம் என பிசிசிஐ சார்பில் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இந்த இருவரும் அணியில் இடம்பிடித்தனர். இதனால் அடுத்த உலகக்கோப்பை தொடரிலும் அவர்கள் இடம்பெறுவர் என்பது ஏறக்குறைய உறுதியானதாக கூறப்பட்டது.

ஆனால், 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலியை நீக்க தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பேசிய விராட் கோலி, "உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட்டை விளம்பரப்படுத்த பெயர் பயன்படுத்தப்படுகிறது என்பது எனக்குத் தெரியும்.ஆனால், டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடும் திறன் என்னுள் இன்னும் இருப்பதாக நினைக்கிறேன். டி 20 கிரிக்கெட்டில் நான் தொடக்க வீரராக களமிறங்கி அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுக்க முயற்சிக்கிறேன்"என்று கூறினார்.

உலகக்கோப்பைக்கு கோலி தேவையில்லை என்பதை கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கின்றது - ஆரோன் பின்ச் காட்டம் !

இந்த நிலையில், உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி தேவையில்லை என்ற பேச்சுகள் எல்லாம் வேடிக்கையாக இருக்கின்றன என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "நான் பார்த்ததில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விராட் கோலி சிறந்த வீரர். ஒவ்வொரு முறையும் பெரிய போட்டிகளில் ரன்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்கிறார்.

ஆனால், ஐ.சி.சி தொடர் வரும்போது விராட் கோலியின் இடத்தை பற்றி ஏன் பேசுகிறார்கள்? அவர் வேண்டாம் என யார் அழுத்தம் கொடுக்கிறார்கள் ? என்று புரியவில்லை. உலகின் மிகசிறந்த வீரர் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும்போது, அவர் தேவையா, தேவையில்லையா என்ற பேச்சுகள் எல்லாம் வேடிக்கையாக இருக்கின்றன" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories