விளையாட்டு

"நம்பர் 1 வீரராக இருந்த ரூட்டை இப்படி மாற்றிவிட்டார்கள்" - இங். அணி குறித்து அஸ்வின் கருத்து !

Bazball ஆக்ரோஷமான ஆட்டம் கிடையாது என்பதை நான் உணர்ந்து கொண்டேன் என அஸ்வின் கூறியுள்ளார்.

"நம்பர் 1 வீரராக இருந்த ரூட்டை இப்படி மாற்றிவிட்டார்கள்" - இங். அணி குறித்து அஸ்வின் கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2022ம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ப்ரென்டன் மெக்கலமும், அணி கேப்டனாக பென் ஸ்டோக்ஸும் நியமிக்கப்பட்டனர். அதன்பின்னர் இயான் மார்கன் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகப்படுத்தி உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்த அட்டாக்கிங் கேமை டெஸ்ட்டிலும் அறிமுகப்படுத்தினர்.

இவர்களின் இந்த புதிய பரிமாணம் bazball என அழைக்கப்பட்டது. இந்த முறையில் நியூஸிலாந்து, இந்தியா போன்ற அணிகளை சொந்த மண்ணில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆஷஸ் தொடரில் bazball முறையில் அதிரடியாக ஆடி அந்த தொடரை 2-2 என்று சமநிலைக்கு கொண்டுவந்தது.

பின்னர் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் bazball முறையில் ஆடி இங்கிலாந்து அணி வென்றது. இதனால் அடுத்து வரும் இந்திய தொடரிலும் bazball முறை தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. ஆனால், அடுத்த நன்கு போட்டிகளிலும் மோசமான முறையில் ஆடி இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்து தொடரை 4-1 என்ற கணக்கில் இழந்தது.

"நம்பர் 1 வீரராக இருந்த ரூட்டை இப்படி மாற்றிவிட்டார்கள்" - இங். அணி குறித்து அஸ்வின் கருத்து !

இந்த நிலையில், Bazball ஆக்ரோஷமான ஆட்டம் கிடையாது என்பதை நான் உணர்ந்து கொண்டேன் என அஸ்வின் கூறியுள்ளார். இது குறித்து தனது Youtube பக்கத்தில் பேசிய அஸ்வின், "முதல் போட்டியில் இங்கிலாந்து வென்ற பின் ஜேம்ஸ் ஆண்டர்சன் நான்காவது இன்னிங்ஸில் 500 அல்லது 600 ரன்கள் இலக்காக இருந்தாலும் அதை 60 ஓவர்களில் நாங்கள் அடிப்போம் என்றார். அது இங்கிலாந்தின் நேர்மறையான மனநிலை மற்றும் அணுகுமுறைக்கு எடுத்துக்காட்டாக இருந்தாலும், அது சற்று அதிகப்படியானதாக இருந்ததாக நான் உணர்ந்தேன்”

முதல் போட்டி முடிந்ததுமே Bazball ஆக்ரோஷமான ஆட்டம் கிடையாது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். அது பாதுகாப்பற்ற கிரிக்கெட். அதைப் பின்பற்றியதால் அவர்கள் தடுப்பாட்ட ஷாட்டை அடிக்கவே இல்லை. அவர்கள் தடுப்பாட்ட நிலையில் இருந்து வெளியே வந்துவிட்டனர். இதற்கு ஜோ ரூட் சம்மதம் தெரிவித்தது எனக்கு ஆச்சரியமாகும். ஏனெனில் உலக கிரிக்கெட்டில் சுழலுக்கு எதிராக தடுப்பாட்டம் விளையாடுவதில் ஜோ ரூட் நம்பர் ஒன் வீரர்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories