விளையாட்டு

"நீங்கள் என்ன சேவாக், ஹைடனை பார்த்தா இப்படி ஆடினீர்கள்? " -இங். அணியை கலாய்த்த முன்னாள் வீரர் !

இங்கிலாந்து தங்கள் சொந்த விஷயத்தைப் பற்றி மட்டும் கவலைப்படட்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹக் கூறியுள்ளார்.

"நீங்கள் என்ன சேவாக், ஹைடனை பார்த்தா இப்படி ஆடினீர்கள்? " -இங். அணியை கலாய்த்த முன்னாள் வீரர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வந்து இங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. ஆனால், அடுத்தடுத்த 4 போட்டிகளில் தோல்வியைத் தழுவி தொடரை 4-1 என்ற கணக்கில் இழந்தது.

இந்த தொடரில் 5 போட்டிகளில் 712 ரன்கள் குவித்த இந்திய தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார். மேலும், இந்த தொடரில் மட்டும் இரண்டு இரட்டை சதங்களை விளாசினார். மேலும், இந்த தொடர் முழுக்க அதிரடி ஆட்டம் ஆடிய ஜெய்ஸ்வால் 25 சிக்ஸர்களை விளாசினார்.

ஜெய்ஸ்வாலின்ஆட்டம் குறித்துப் பேசிய இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் "தங்களிடம் விளையாடும் எதிரணி வீரர்கள் அதிரடியாக விளையாடுவதற்கு தாங்கள்தான் காரணம்.அதற்கான கிரெடிட் தங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் " என்று கூறியிருந்தார். அதனை இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் உள்ளிட்ட பலரும் விமர்சித்திருந்தனர்.

"நீங்கள் என்ன சேவாக், ஹைடனை பார்த்தா இப்படி ஆடினீர்கள்? " -இங். அணியை கலாய்த்த முன்னாள் வீரர் !

இந்த நிலையில், இங்கிலாந்து தங்கள் சொந்த விஷயத்தைப் பற்றி மட்டும் கவலைப்படட்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹக் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "ஜெய்ஸ்வால் தைரியமாக அதிரடியாக சென்று இங்கிலாந்து பந்துவீச்சை முற்றிலும் அழித்துவிட்டார். ஆனால்,அவர் உங்களை பார்த்து விளையாடுவதாக சொல்கிறீர்கள். இங்கிலாந்து தங்கள் சொந்த விஷயத்தைப் பற்றி மட்டும் கவலைப்படட்டும். அடுத்த அணிகளின் விஷயம் பற்றி பேச வேண்டாம்.

நீங்கள் ஜெய்ஸ்வால் உங்களை பார்த்து ஆடுகிறார் என்று சொன்னால், அவர்கள் திருப்பி நீங்கள் சேவாக்கை பார்த்து விளையாடுவதாக சொல்வார்கள். நாங்கள் ஹைடன் மற்றும் லாங்கர் இருவரையும் பார்த்து நீங்கள் அதிரடியாக ஆடுவதாக சொல்வோம். இங்கிலாந்து அடுத்த அணிகள் மீது கவனம் செலுத்தியபோதே தோற்றுவிட்டது. Bazball வேலை செய்கிறதா என்கின்ற பேச்சு இருக்கிறது. ஆனால், அது இங்கிலாந்தின் வெற்றி சதவீதத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories