விளையாட்டு

"அவர்களிடம் பேசாமல் BCCI எடுத்த இந்த முடிவு மிகவும் தவறானது" - வீரர்களுக்கு ஆதரவாக கங்குலி கருத்து !

ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் விவகாரத்தில் பிசிசிஐ செய்தது தவறானது என முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலி கூறியுள்ளார்.

"அவர்களிடம் பேசாமல் BCCI எடுத்த இந்த முடிவு மிகவும் தவறானது"  - வீரர்களுக்கு ஆதரவாக கங்குலி கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டெஸ்ட் போட்டிதான் சிறந்த வீரர்களை உருவாக்குகிறது என்று நிபுணர்கள் அடிக்கடி சொல்வார்கள். அதற்கு உதாரணமாக தொடர்ந்து 4 நாள் ஆடப்படும் ரஞ்சி கோப்பையில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் வீரர்கள் இந்திய அணியில் தூண்களாக பல ஆடுகள் நீடிக்கிறார்கள். இப்போது இந்திய அணியில் ஜாம்பவான்கள் என்று சொல்லப்படும் அனைவரும் ரஞ்சி கோப்பை உருவாக்கிய நாயகர்கள்தான்.

ஆனால், இந்த காலத்தில் ஐபிஎல் வந்ததால் ரஞ்சி கோப்பை தொடர் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும், இந்திய அணியில் ஆடும் நட்சத்திர வீரர்களும் ரஞ்சி கோப்பையில் ஆடாமல் புறக்கணித்தனர். சமீப காலத்தில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது .

அதனைத் தொடர்ந்து காயம் அடைந்த வீரர்களை தவிர அனைவரும் ரஞ்சி அணியில் ஆடவேண்டும் என்று பிசிசிஐ அதிரடி உத்தரவிட்டது. ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கு பின் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு பிடிப்பு காரணமாக ரஞ்சி டிராபி தொடரில் விளையாடாமல் விலகினார்.

"அவர்களிடம் பேசாமல் BCCI எடுத்த இந்த முடிவு மிகவும் தவறானது"  - வீரர்களுக்கு ஆதரவாக கங்குலி கருத்து !

அதே போல தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடருக்கு பின்னர் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த இளம் வீரர் இஷான் கிஷனும் ரஞ்சி தொடரில் ஆடாமல் ஐபிஎல் தொடருக்காக ஹர்திக் பாண்டியவுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டார். இவர்கள் இருவரையும் ரஞ்சி தொடரில் ஆடுமாறு பிசிசிஐ கூறியும் இவர்கள் ரஞ்சி அணியில் இணையவில்லை.

இதன் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் ஆகிய இருவரையும் வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் இருந்து பிசிசிஐ நீக்கியது. அது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் விவகாரத்தில் பிசிசிஐ செய்தது தவறானது என முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலி கூறியுள்ளார்.

"அவர்களிடம் பேசாமல் BCCI எடுத்த இந்த முடிவு மிகவும் தவறானது"  - வீரர்களுக்கு ஆதரவாக கங்குலி கருத்து !

இது குறித்துப் பேசிய அவர், " மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கும் முன்னர், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயரிடம் ஜெய்ஷா மற்றும் ரோஜர் பின்னி, தேர்வு குழுவினர் கண்டிப்பாக பேசியிருக்க வேண்டும்.இஷான் கிசன் ஒன்றும் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்ததில்லை. அவர் சிறிது ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளை நிற கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி இருக்கிறார். இந்த ஒரு முறை விளையாடவில்லை என்பதற்காக அவர் ஒரு மோசமான வீரராக மாறிவிடுவாரா ?

நிறைய வீரர்கள் இம்முறை சையது முஸ்தாக் அலி கோப்பை, விஜய் ஹாசாரே கோப்பையிலும் விளையாடியுள்ளார்கள். நான் தனிப்பட்ட முறையில் அனைத்து வீரர்களிடம் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உடல் தகுதியை பெறுங்கள் என்று கூறியிருந்தேன். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வீரர் ரஞ்சி போட்டிகள் விளையாடாமல் போவது இதுதான் முதல் முறையா? நிச்சயமாக இந்த வீரர்கள் எல்லாம் ஓய்வு நேரத்தில் ரஞ்சிப் போட்டியில் விளையாடியிருக்கிறார்கள். இதனால் பிசிசிஐ இந்த விவகாரத்தில் சரியான முடிவு எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories