விளையாட்டு

தொடர்ந்து 17 வெற்றிகள் : உள்நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தொடர்ந்து வெற்றி பெற்ற அணி... இந்தியா சாதனை!

உள்நாட்டில் நடைபெற்ற மிக நீண்ட டெஸ்ட் தொடரில் தொடர்ந்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையையையும் இந்திய அணி தக்கவைத்துள்ளது.

தொடர்ந்து 17 வெற்றிகள் : உள்நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தொடர்ந்து வெற்றி பெற்ற அணி... இந்தியா சாதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வென்ற நிலையில், அடுத்த போட்டியில் இந்தியா வென்று தொடரை 1-1 என சமன் செய்தது.

தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 434 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.இதையடுத்து நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.பிறகு விளையாடிய இந்திய அணி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரேலி ஆகியோரின் நிதான ஆட்டத்தால் 307 ரன்களை எட்டி ஆல் அவுட்டானது.

பின்னர் இரண்டாவது இன்னிங்க்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணி 142 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதேபோல் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.பின்னர் 192 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய இந்திய அணியில் இறுதிக்கட்டத்தில். துருவ் ஜூரல், கில் இணை அபாரமாக ஆடி இந்திய அணியை வெற்றிபெற வைத்தனர்,

தொடர்ந்து 17 வெற்றிகள் : உள்நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தொடர்ந்து வெற்றி பெற்ற அணி... இந்தியா சாதனை!

இதன் மூலம் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இங்கிலாந்து அணியில் மெக்கல்லம்-ஸ்டோக்ஸ் இணை பொறுப்பேற்று bazball முறையில் அந்த ஆடி வந்தது.இது பெரும் வெற்றிகரமாக வலம்வந்த நிலையில், அதற்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்தது.

அதோடு உள்நாட்டில் நடைபெற்ற மிக நீண்ட டெஸ்ட் தொடரில் தொடர்ந்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையையையும் இந்திய அணி தக்கவைத்துள்ளது. உள்நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. அந்த வகையில் இதுவரை சொந்த மண்ணில் நடைபெற்ற நீண்ட டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து 17-வது முறை தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

இந்த பட்டியலில் 2004 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை உள்நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 10 தொடர்களை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இடத்தில் உள்ளது. அதே போல கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை அந்த அணி தங்கள் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 10 முறை வென்று ஆஸ்திரேலிய அணியே மூன்றாம் இடத்திலும் உள்ளது.

banner

Related Stories

Related Stories