விளையாட்டு

ரோஹித் கேட்ட கேள்வி : கைதூக்கி இங்கிலாந்து கதையை முடித்த அஸ்வின் : INDvsAUS போட்டியில் நடந்தது என்ன ?

ரோஹித் கேட்ட கேள்வி : கைதூக்கி இங்கிலாந்து கதையை முடித்த அஸ்வின் : INDvsAUS போட்டியில் நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வென்ற நிலையில், அடுத்த போட்டியில் இந்தியா வென்று தொடரை 1-1 என சமன் செய்தது.

தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 434 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.இதையடுத்து நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

பிறகு விளையாடிய இந்திய அணி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரேலி ஆகியோரின் நிதான ஆட்டத்தால் 307 ரன்களை எட்டி ஆல் அவுட்டானது. பின்னர் இரண்டாவது இன்னிங்க்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணி 142 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதேபோல் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

ரோஹித் கேட்ட கேள்வி : கைதூக்கி இங்கிலாந்து கதையை முடித்த அஸ்வின் : INDvsAUS போட்டியில் நடந்தது என்ன ?

இது குறித்து இன்றைய நாள் முடிவுக்கு பின்னால் பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின் " இன்று பந்துவீச்சை முதலில் யார் தொடங்கப் போகிறார்கள் என்று கேப்டன் ரோஹித் சர்மா கேட்டார். அப்பொழுது நான் தொடங்குகிறேன் என்று கையைத் தூக்கினேன். புதிய பந்தில் பந்து வீசுவதை நான் ரசிக்கிறேன்.இந்த ஆடுகளத்தில் பந்து வீச்சுக்கு பெரிதான உதவிகள் இல்லை என்று நினைத்தேன். இதனால் நான் அதிகளவு சிந்திக்க வேண்டி இருந்தது. இதற்காக நான் மனரீதியாக சீரமைத்துக் கொண்டேன்.

இன்று குல்தீப் யாதவ் மிகவும் புத்திசாலித்தனமாக பந்து வீசினார். அவர் பந்துவீச்சு வேகத்தில் செய்த மாற்றம் மற்றும் அவர் பந்தில் செய்த டிரிப்ட் மிகவும் சிறப்பாக இருந்தது. நாங்கள் ஹோட்டலுக்கு திரும்பும் பொழுது 70, 80 ரன்கள் குறைவாக எடுத்திருப்போம் என்று நேற்று நினைப்போம். இன்று ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் மிகச் சிறப்பாக துவங்கி இருக்கிறார்கள். இந்த இலக்கைத் துரத்தி ஆட்டத்தை வெல்ல முடியும் என நம்புகிறேன்" என்று கூறியிருக்கிறார்.

banner

Related Stories

Related Stories