இந்தியா

சிங்கங்களுக்கு அக்பர்-சீதா என பெயர் வைத்த அதிகாரி சஸ்பெண்ட் : திரிபுரா பாஜக அரசின் செயலால் அதிர்ச்சி !

சிங்கங்களுக்கு அக்பர்-சீதா என பெயர் வைத்ததற்காக திரிபுரா மாநில முதன்மை வன அதிகாரியை திரிபுரா பாஜக அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

சிங்கங்களுக்கு அக்பர்-சீதா என பெயர் வைத்த அதிகாரி சஸ்பெண்ட் : திரிபுரா பாஜக அரசின் செயலால் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மேற்கு வங்கத்தின் சிலிகுரி சஃபாரி பூங்காவுக்கு திரிபுராவில் இருந்து அக்பர் என்ற ஆண் சிங்கமும், சீதா என்ற பெண் சிங்கமும் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த இரு சிங்கத்தையும் ஒரே இடத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் இதனை எதிர்த்து இந்துத்துவ அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் தொடரப்பட்ட மனுவில், "அக்பர் புகழ்பெற்ற முகலாய பேரரசர்களில் ஒருவர். சீதா ராமாயணத்தில் ஒரு பாத்திரம். இந்து மத வழக்கங்களில் சீதை தெய்வமாக கொண்டாடப்படுகிறார்.

இந்த சூழலில், இந்த பெயர் கொண்ட இரு சிங்கங்களை ஒரே இடத்தில வைப்பது இந்துக்களின் மனதை வனத்துறை புண்படுத்திவிட்டது. எனவே அவற்றை வேறு வேறு இடங்களில் வைக்கவேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

சிங்கங்களுக்கு அக்பர்-சீதா என பெயர் வைத்த அதிகாரி சஸ்பெண்ட் : திரிபுரா பாஜக அரசின் செயலால் அதிர்ச்சி !

இந்த வழக்கு தள்ளுபடியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையில் "பொதுமக்கள் வணக்கத்திற்கு உரியவர்களாக கருதும் யாருடைய பெயரையும் எந்த ஒரு விலங்குக்கும் வைக்கக்கூடாது. உங்கள் செல்லப் பிராணிக்கு ஏதேனும் இந்து தெய்வம் அல்லது முஸ்லிம் தீர்க்கதரிசியின் பெயரை வைப்பீர்களா?"என நீதிபதி கேள்வியெழுப்பினார்.

அதனைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட விலங்குகளுக்கு வேறு பெயர் வைக்குமாறு கூறி நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிங்கங்களுக்கு அக்பர்-சீதா என பெயர் வைத்ததற்காக திரிபுரா மாநில முதன்மை வன அதிகாரி பிரபின் லால் அகர்வாலை திரிபுரா பாஜக அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

மேற்கு வங்கம் சிலிகுரி விலங்குகள் சரணாலயத்திற்கு திரிபுராவிலிருந்து சிங்கங்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், திரிபுராவில் வைத்துதான் சிங்கங்களுக்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது என்று சிலிகுரி விலங்குகள் சரணாலயம் தரப்பில் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து இதில் சம்மந்தப்பட்ட திரிபுரா மாநில முதன்மை வன அதிகாரி பிரபின் லால் அகர்வாலை மாநில அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

banner

Related Stories

Related Stories