விளையாட்டு

INDvsENG : 179 ரன்கள் விளாசிய ஜெய்ஸ்வால்... முதல் நாள் போட்டியில் இந்தியா ஆதிக்கம் !

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் 179 ரன்கள் குவித்து விளையாடி வருகிறார்.

INDvsENG : 179 ரன்கள் விளாசிய ஜெய்ஸ்வால்... முதல் நாள் போட்டியில் இந்தியா ஆதிக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து இந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியில் ரஜத் படிதார் அறிமுகமானார். மேலும், குல்தீப் மற்றும் முகேஷ் குமாருக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

தொடர்ந்து டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் களமிறங்க ரோகித் சர்மா 14, சுப்மன் கில் 34, ஸ்ரேயாஸ் ஐயர் 27 ரன்கள் என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

INDvsENG : 179 ரன்கள் விளாசிய ஜெய்ஸ்வால்... முதல் நாள் போட்டியில் இந்தியா ஆதிக்கம் !

அடுத்து வந்த அறிமுக வீரர் ரஜத் படிதார் 32 ரன்களுக்கும், அக்சர் படேல் 27 ரன்களுக்கும், ஸ்ரீகர் பரத் 17 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். எனினும் ஒருமுனையில் அபாரமாக ஆடிய துவக்க வீரர் ஜெய்ஸ்வால், 151 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர் 150 ரன்களை கடந்தும் ஆடி வருகிறார். முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்துள்ளது. ஜெய்ஸ்வால் 179 ரன்களுடனும், அஸ்வின் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை இரண்டாம் நாள் போட்டி நடைபெறவுள்ளது.

banner

Related Stories

Related Stories