விளையாட்டு

"என்னால் பெரிய ஸ்கோரை அடிக்கமுடியாது என நான் வருத்தப்படுவேன்" - சர்ஃப்ராஸ் கான் கூறியது என்ன ?

நான் அடைந்துள்ள இடத்திற்கான முழுபலனும் என் தந்தைக்குதான் செல்லும் என சர்ஃப்ராஸ் கான் கூறியுள்ளார்.

"என்னால் பெரிய ஸ்கோரை அடிக்கமுடியாது என நான் வருத்தப்படுவேன்" - சர்ஃப்ராஸ் கான் கூறியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஐபிஎல் தொடருக்கு முன்னர் ரஞ்சி கோப்பையை இந்திய அணிக்கு தேர்வாகும் முக்கியத் தொடராக இருந்தது. ஆனால் ஐபிஎல் வந்தபின் அதில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கே அணியில் இடம் வழங்கப்படுகிறித்து. ரஞ்சி கோப்பையில் சிறப்பாக ஆடியவர்களுக்கு அணியில் இடம் மறுக்கப்படுகிறது.

அத்தகைய வாய்ப்பு மறுக்கப்படும் வீரர்தான் சர்ஃப்ராஸ் கான். மும்பை அணிக்கு ஆடி வரும் சர்ஃப்ராஸ் கான் ரஞ்சி தொடரில் ஒரு ஆண்டு மட்டும் அல்ல, கடந்த 3 தொடர்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். 2019-20 ரஞ்சி தொடரில் அவரது ரன் சராசரி 154.7. 2021-22 ரஞ்சி தொடரில் அவரின் ரன் சராசரி 122.8. இது கிரிக்கெட்டின் ஜாம்பவான் டான் பிராட்மேனின் சராசரியை விட மிகஅதிகம். இது தவிர சர்ஃப்ராஸ் கானின் ஒட்டுமொத்த சராசரியே 82.83.

ஆனால், அவர் இந்திய அணியில் இடம் பெறாததற்கு அவரின் உடலின் எடை ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. என்றாலும் தொடர்ந்து அடுத்தடுத்து 2 ரஞ்சி தொடர்களில் 900 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்று சிறப்பாக ஆட உடல் எடை ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்து வருகிறார்.

"என்னால் பெரிய ஸ்கோரை அடிக்கமுடியாது என நான் வருத்தப்படுவேன்" - சர்ஃப்ராஸ் கான் கூறியது என்ன ?

ஆனாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில், தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் இரண்டாம் டெஸ்ட் போட்டிக்கான 11 வீரர்கள் பட்டியலில் அவர் இடம்பெறவில்லை. இந்த நிலையில், நான் அடைந்துள்ள இடத்திற்கான முழுபலனும் என் தந்தைக்குதான் செல்லும் என சர்ஃப்ராஸ் கான் கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், என் தந்தைதான் என்னை கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தினார். முதலில் நான் ஒரு அதிரடி பேட்ஸ்மேனாகவே இருந்தபோது, விரைவாக அவுட்டாகி வெளியேறிவிடுவேன். இதனால் என்னால் பெரிய ஸ்கோரை அடிக்கமுடியாது. அப்போது எல்லாம் மற்றவீரர்கள் போல நம்மால் நீண்ட நேரம் ஆட முடியவில்லையே என வருத்தப்பட்டுள்ளேன். அப்போது என் தந்தைதான் கடின உழைப்பின் மீது எப்போதும் நம்பிக்கையோடு இரு எனக்கூறுவார். தற்போது நான் அடைந்துள்ள இடத்திற்கான முழுபலனும் அவருடைய கடின உழைப்பின் விளைவாகும்"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories