விளையாட்டு

10.7 பில்லியன் டாலர்களாக உயர்ந்த IPL மதிப்பு : முதலிடத்தில் இருக்கும் ஐபிஎல் அணி எது ? வெளியான அறிக்கை !

ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் பிராண்ட் மதிப்பு 28% அதிகரித்து 10.7 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

10.7 பில்லியன் டாலர்களாக உயர்ந்த IPL மதிப்பு : முதலிடத்தில் இருக்கும் ஐபிஎல் அணி எது ?  வெளியான அறிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளங்கி வருகின்றன. அதே போல இந்த இரு அணிகளுக்கும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது. இந்த அணிகள் சொந்த மைதானத்தில் விளையாடும்போது அரங்கமே அந்த அணிகளின் வண்ணங்களால் நிறைந்து இருக்கும்.

ஆனால், இந்த இரு அணிகளை ஒப்பிட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே அதிக ரசிகர்கள் இருப்பது தெரியவரும். சென்னை அணி சொந்த மைதானத்தில் விளையாடினாலும் அடுத்த மைதானத்தில் விளையாடினாலும் மைதானம் மஞ்சள் நிறத்தால் நிறைந்திருக்கும். கடந்த மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையான கோப்பையை வென்று அசத்தியது.

10.7 பில்லியன் டாலர்களாக உயர்ந்த IPL மதிப்பு : முதலிடத்தில் இருக்கும் ஐபிஎல் அணி எது ?  வெளியான அறிக்கை !

இந்த நிலையில், ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் பிராண்ட் மதிப்பு 28% அதிகரித்து 10.7 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து பிராண்ட் வேல்யுவேஷன் ஆலோசக நிறுவனமான பிராண்ட் பைனான்ஸி வெளியிட்ட அறிக்கையில், 10 பில்லியன் டாலர்கள் மதிப்பினை கொண்ட ‘டெக்காகார்ன்’ நிறுவனங்களில் ஒன்றாக ஐபிஎல் தொடர் இடம்பெற்றுள்ளது.

அந்த வகையில், ஐபிஎல்-இன் ஒட்டுமொத்த பிராண்ட் மதிப்பு தொடங்கப்பட்ட ஆண்டான 2008 முதல் இப்போது வரை 433% அதிகரித்துள்ளது. ஐபிஎல் உரிமையாளர்கள் மட்டத்தில் மும்பை இந்தியன்ஸின் பிராண்ட் வேல்யூ முதலிடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாம் இடத்திலும் உள்ளது. அதே நேரம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டாப் தரவரிசையான ஏஏஏ ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories