விளையாட்டு

அடுத்த ரெய்னா : ரூ.8.40 கோடி கொட்டி 20 வயது இளம்வீரரை தூக்கிய CSK ! யார் இந்த சமீர் ரிஸ்வி ?

சென்னை அணி ரூ.8.40 கோடிக்கு 20 வயது இளம்வீரர் சமீர் ரிஸ்வியை ஏலத்தில் எடுத்துள்ளது.

அடுத்த ரெய்னா : ரூ.8.40 கோடி கொட்டி 20 வயது இளம்வீரரை தூக்கிய CSK !  யார் இந்த சமீர் ரிஸ்வி ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான மினி ஏலம் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த ஏலத்தில் நியூஸிலாந்து வீரர் டேரில் மிட்செலை 14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. மற்றொரு நியூஸிலாந்து வீரரான ரச்சின் ரவீந்திராவை 1.80 கோடிக்கும், இந்திய வீரர் ஷர்துல் தாகூரை 4 கோடிக்கும் ஏலத்தில் எடுத்துள்ளது சென்னை அணி.

அதன் பின்னர் சர்வதேச போட்டிகளில் ஆடாத வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது. இதில் சமீர் ரிஸ்வி என்ற 20 வயது வீரரை வாங்க ஆரம்பத்தில் இருந்தே குஜராத் அணியும், சென்னை அணியும் போட்டியிட்டன. ஒரு கட்டத்தில் குஜராத் அணி பின்வாங்க டெல்லி அணி களத்தில் குதித்தது. ஆனால் இறுதிவரை விட்டுக்கொடுக்காத சென்னை அணி ரூ.8.40 கோடிக்கு சமீர் ரிஸ்வியை ஏலத்தில் எடுத்தது. அதனைத் தொடர்ந்து யார் இந்த வீரர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்த ரெய்னா : ரூ.8.40 கோடி கொட்டி 20 வயது இளம்வீரரை தூக்கிய CSK !  யார் இந்த சமீர் ரிஸ்வி ?

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சமீர் ரிஸ்வி இது வரை ஒரு ரஞ்சி கோப்பை தொடரில் மட்டுமே ஆடியுள்ளார். ஆனால், உள்ளூர் லீக் மற்றும் சையத் முஸ்டாக் அலி தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இடம்பிடித்துள்ளார்.

உத்திரபிரதேசத்தில் டி20 லீக் தொடரில், கான்பூர் சூப்பர் ஸ்டார் அணிக்காக விளையாடிய சமீர் ரிஸ்வி அந்த தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். அதோடு அதிவேக சதமடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

பின்னர் 23 வயதுக்குட்பட்டவர்களுக்கான தொடரில் ராஜஸ்தானுக்கு எதிராக போட்டியில், 65 பந்துகளில் 91 ரன்களும், அந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் 50 பந்துகளில் 84 ரன்களும் குவித்தார். சமீபத்தில் முடிவடைந்த சையத் முஸ்டாக் அலி தொடரில் 69.25 என்ற சராசரியோடு 139.90 ஸ்ட்ரைக் ரேட்டில் 277 ரன்கள் குவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories