விளையாட்டு

"இவ்வளவு காசு வருது, இதை கூட செய்யத்தெரியாதா" - தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்த கவாஸ்கர்!

மைதானத்தை முழுமையாக மூடாத தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தை சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

"இவ்வளவு காசு வருது, இதை கூட செய்யத்தெரியாதா" - தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்த கவாஸ்கர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரை இளம் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை உலகக் கோப்பை தொடரை முடித்துக் கொண்டு, தற்பொழுது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதன் முதல் போட்டி நேற்று டர்பன் நகரில் நடைபெற்றது.

ஆனால், மழை தொடர்ந்து பெய்து வந்ததாலும், மைதானம் ஈரப்பதமாக இருந்தாலும் டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது. இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தை சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

"இவ்வளவு காசு வருது, இதை கூட செய்யத்தெரியாதா" - தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்த கவாஸ்கர்!

இது குறித்துப் பேசிய அவர், " மைதானத்தில் மழை பெய்துகொண்டிருந்தபோது பிட்ச் மற்றும் 30 யார்ட் வளையம் மட்டுமே தார்பாய் மூலமாக மூடப்பட்டிருந்தது. நிலைமை இப்படி இருந்தால் ஆட்டத்தை கைவிடத்தான் வேண்டி வரும். கிரிக்கெட் சங்கங்களும் அதிக வருவாய் ஈட்டுகிறார்கள். அதனால் மழை பெய்தால் மைதானத்தை முழுமையாக மூடுவதற்கான பணிகளை செய்ய வேண்டும்.

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது மைதானத்தை முழுமையாக மூடாததால் ஏராளமான போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. இதில் பாதிக்கப்பட்ட அணிகளில் தென்னாப்பிரிக்கா முக்கியமானது. ஆனால், அவர்கள் நாட்டிலும் அதேதான் செய்கிறார்கள்.கொல்கத்தா மைதானத்தில் மழை பெய்தபோது மைதானம் முழுவதையும் தார்பாய் மூலம் மூடி சவுரவ் கங்குலி எடுத்த நடவடிக்கையால் ஒருமுறை டெஸ்ட் போட்டி நடத்தி முடிக்கப்பட்டது. ஆசிய கோப்பையின் போது இலங்கை கிரிக்கெட் வாரியமும் இதே போன்று சிறப்பாக செயல்பட்டது. பிற வாரியங்களும் அதனை பின்பற்றவேண்டும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories