விளையாட்டு

தொடர்ந்து அசத்திய தமிழக வீரர் சாய் சுதர்சன்: இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் அளவு அவர் செய்தது என்ன ?

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அசத்திய தமிழக வீரர் சாய் சுதர்சன்: இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் அளவு அவர் செய்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உள்நாட்டு தொடர்களில் கலக்கி வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியில் இடம்பிடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டும் அந்த அணி சாய் சுதர்சனை தக்கவைத்தது.அதன்பின் ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் குஜராத் அணி சாய் சுதர்சனுக்கு வாய்ப்புகள் வழங்கியது.

பின்னர் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் 43 ரன்கள் குவித்து ரிடையர்ட் கட் முறையில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து இறுதிப்போட்டியில் 47 பந்துகளில் 6 சிக்சர், 8 பவுண்டரிகள் என 96 ரன்கள் விளாசி இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார். ஆட்டமிழந்து ஓய்வறைக்கு சென்ற அவருக்கு குஜராத் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தொடர்ந்து அசத்திய தமிழக வீரர் சாய் சுதர்சன்: இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் அளவு அவர் செய்தது என்ன ?

ஐபிஎல் தொடரில் தான் காட்டிய அதிரடியை அவர் டி.என்.பி.எல் தொடரிலும் தொடர்ந்தார். இதன் காரணமாக அவருக்கு இலங்கையின் கொழும்பு நகரில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 5 ஏ அணிகள் பங்கேற்கும் எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி சதம் விளாசினார். தொடர்ந்து இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சர்ரே அணி சாய் சுதர்சனை ஒப்பந்தம் செய்தது. அங்கு ஹம்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் 73 ரன்களை விளாசி மோசமான நிலையில் இருந்து சர்ரே அணியை காப்பாற்றினார்.

பின்னர் இரண்டாவது இன்னிங்சில் அணியை தோல்வியில் இருந்த காக்க இறுதிவரை போராடி கடைசி வீரராக 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதே நேரம், பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் இரண்டு அணிகளை சேர்ந்த வீரர்களும் சொதப்பிய நிலையில், அங்கு சிறப்பாக ஆடிய சாய் சுதர்சனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டை தெரிவித்தனர்.

தொடர்ந்து அசத்திய தமிழக வீரர் சாய் சுதர்சன்: இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் அளவு அவர் செய்தது என்ன ?

இந்த நிலையில், தொடர்ந்து சிறப்பாக ஆடும் தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சனுக்கு முதல் முறையாக இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணி அடுத்ததாக தென்னாபிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் நிலையில், அதில் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி-

ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரின்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார், அவேஷ் கான் , அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர்.

banner

Related Stories

Related Stories