விளையாட்டு

24 வயதில் கேப்டன் பொறுப்பு : குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக சுப்மான் கில் நியமனம் - ஹர்திக்கின் நிலை என்ன ?

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாகவும் சுப்மான் கில் அறிவிக்கப்பட்டுள்ளார்.

24 வயதில் கேப்டன் பொறுப்பு : குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக சுப்மான் கில் நியமனம் - ஹர்திக்கின் நிலை என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சமீப காலமாக இந்தியாவின் தவிர்க்கமுடியாத வீரராக இளம்வீரர் சுப்மான் கில் உருவாகியுள்ளார். கவாஸ்கர்,சச்சின், கோலி என ஒவ்வொரு தலைமுறைக்கும் சிறப்பாக ஒரு மட்டைவீச்சாளரை இந்தியா தொடர்ந்து உருவாகிவரும் நிலையில், கோலிக்கு பின்னர் அந்த இடத்துக்கு வருவது யார் என்ற கேள்வி எழுந்தது.

தற்போதைய நிலையில், கோலிக்கு பின் இந்திய மட்டைவீச்சை வழிநடத்துபவராக சுப்மான் கில் இருப்பார் என பல்வேறு முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற யு-19 போட்டியில் சிறப்பான செயல்பட்ட கில் அனைவரையும் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடிவந்த கில் கடந்த 2019-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான தொடர் மூலம் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியில் தனது இடத்தை தக்கவைத்த கில், மூன்று விதமான கிரிக்கெட் தொடரிலும் இந்தியாவின் தவிர்க்கமுடியாத வீரராக மாறியுள்ளார். அதிலும் கடந்த ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான போட்டியில் 200 ரன்கள் குவித்து சாதனை படைத்ததோடு, அதே மாதம் டி20 போட்டியிலும் சதம் விளாசி இளம்வயதில் மூன்று விதமான போட்டிகளிலும் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

24 வயதில் கேப்டன் பொறுப்பு : குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக சுப்மான் கில் நியமனம் - ஹர்திக்கின் நிலை என்ன ?

தற்போது முடிவடைந்த உலகக்கோப்பை தொடரிலும் சிறப்பாக செயல்பட்ட அவர், முதல் முறையாக ஐசிசி ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தினார். இந்த நிலையில், அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாகவும் சுப்மான் கில் அறிவிக்கப்பட்டுள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா வீரர்கள் பரிமாற்ற முறையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்ற நிலையில், அந்த அணியில் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. அந்த அணியின் அனுபவ வீரர் கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளம்வீரர் சுப்மான் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories