விளையாட்டு

“விடுங்க, அடுத்த உலககோப்பைக்கு நாம்தான் கடுமையான போட்டியாளர்” - ரவி சாஸ்திரி கணிப்பு !

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி கடும் போட்டியாளராக இருக்குமென ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

“விடுங்க, அடுத்த உலககோப்பைக்கு நாம்தான் கடுமையான போட்டியாளர்” - ரவி சாஸ்திரி கணிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது .

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் பின்னர் ட்ராவிஸ் ஹெட், லபுசேனேவின் ஆட்டம் காரணமாக இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் இந்தியா சிறப்பாக செயல்பட்ட நிலையில், இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவியது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இளம்வீரர்களோடு களமிறங்கிய இந்திய அணி முதல் இரண்டு டி 20 போட்டிகளில் வென்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி கடும் போட்டியாளராக இருக்குமென ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

“விடுங்க, அடுத்த உலககோப்பைக்கு நாம்தான் கடுமையான போட்டியாளர்” - ரவி சாஸ்திரி கணிப்பு !

இது குறித்துப் பேசிய அவர், " உலகக்கோப்பை வெல்வது எளிதல்ல, அது எளிதில் கிடைக்கும் விடாது. இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஒரு உலகக் கோப்பையை வெல்ல 6 உலகக் கோப்பைகளாக காத்திருக்க வேண்டியிருந்தது. உலகக் கோப்பையை வெல்ல இறுதிப்போட்டி நடைபெறும் நாள் சிறப்பானதாக அமைய வேண்டும். இறுதிப்போட்டிக்கு முன்னதாக நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.

இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா சிறப்பாக செயல்பட்டதால் கோப்பையை வென்றது. எனினும் தோல்வியை நினைத்து முடங்கிவிடாமல் வீரர்கள் முன்னேறிச் செல்ல வேண்டும். இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி கடும் போட்டியாளராக இருக்கும். நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் வலிமையான அணியாக இருந்தும், கோப்பையை வெல்ல முடியாதது ஏமாற்றமளிக்கிறது" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories