விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா ? கோலி, ஷமி முதல் ஷ்ரேயாஸ் வரை !

நியூசிலாந்துக்கு எதிரான ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா ? கோலி, ஷமி முதல் ஷ்ரேயாஸ் வரை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அரையிறுதிபோட்டியில், இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த போட்டியில் இந்திய அணி மற்றும் வீரர்கள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.

நேற்றைய போட்டியில் சதமடித்ததன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 50 சதம் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 2008 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இடம்பிடித்த விராட் 2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 107 ரன்கள் எடுத்து செஞ்சுரி கணக்கை தொடங்கியவர் நேற்று, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 117 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 52 ஆண்டு கால ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 49 சதங்கள் விளாசி இருந்த சச்சினின் சாதனையை முறியடித்து விராட் கோலி வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

மேலும் ஒரே உலகக்கோப்பையில் 700 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 80 ரன்கள் கடந்த போது, ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்தவரான டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். சச்சின் 673 ரன்கள் எடுத்திருந்தே சாதனையாக இருந்தது. அத்துடன் உலக கோப்பையில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். இதுவரை 8 முறை விராட் கோலி 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா ? கோலி, ஷமி முதல் ஷ்ரேயாஸ் வரை !

ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை இந்திய கேப்டன் ரோகித் சர்மா படைத்துள்ளார். உலககோப்பை தொடரில் இதுவரை அவர் 28 சிக்ஸர்களை அடித்துள்ளார். இதற்கு முன்பு 2005 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் 26 சிக்சர்களை அடித்துள்ளார். கெயிலின் சாதனையை ரோகித் ஷர்மா முறியடித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் படைத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு அரையிறுதி ஆட்டத்தில் அவர் 8 சிக்ஸர்கள் பறக்க விட்டார். இதற்கு முன்பு 1999ம் ஆண்டு உலககோப்பையில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் கங்குலியும், 2007 ஆண்டு உலக்கோப்பை தொடரில் பெர்முடா அணிக்கு எதிரான ஆட்டத்தில் யுவராஜ் சிங் 7 சிக்ஸர்களை எடுத்திருந்தனர். இவர்களின் சாதனையை ஸ்ரேயாஸ் முறியடித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா ? கோலி, ஷமி முதல் ஷ்ரேயாஸ் வரை !

உலககோப்பை தொடரில் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீரர் முகமது ஷமி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். 4 முறை ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியாவின் மிட்ஷெல் ஸ்டார்க் 3 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தே முந்தைய சாதனையாக இருந்தது. அவரது சாதனையை இந்தியாவின் முகமது ஷமி தகர்த்தியுள்ளார். அதோடு இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராகவும் ஷமி மாறியுள்ளார்.

ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சளர் என்ற சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார். இதற்கு முன்னர் 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர் ஜாஹிர் கான் 21 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. தற்போது 23 விக்கெட்டுகள் வீழ்த்தி அந்த சாதனையை முகமது ஷமி முறியடித்துள்ளார்.

இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி இதுவரை தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து இத்தனை போட்டிகளில் வெற்றிபெற்றதில்லை. இதன் மூலம் இந்திய அணி மற்றொரு சாதனையைப் படைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories