விளையாட்டு

தொடர் தோல்வியால் விமர்சனம் : பாகிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து வெளியாகுவதாக பாபர் அசாம் அறிவிப்பு !

தொடர் தோல்வி காரணமாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார்.

தொடர் தோல்வியால் விமர்சனம் : பாகிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து வெளியாகுவதாக பாபர் அசாம் அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. ஆனால், அதன் பின்னர் பங்களாதேஷ் நியூஸிலாந்து ஆகிய அணிகளை வீழ்த்தியது.பின்னர் தனது இறுதி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. இதனால் அந்த அணி அரையிறுதிக்கு செல்லாமல் லீக் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமே காரணம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. மேலும், கடந்த டி20 உலகக்கோப்பையிலும் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு விமர்சிக்கப்பட்டது. அதோடு கடந்த உலகக்கோப்பை தொடரிலும் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லாமல் வெளியேறியது.

சமீபத்தில் முடிவடைந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியால் இறுதிப்போட்டிக்கு கூட தகுதிபெறமுடியவில்லை. இதன் காரணமாக கேப்டன் பதவியை விட்டு விலக பாபர் அசாம் முடிவெடுத்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதே நேரம் பாகிஸ்தான் வாரியம் சார்பில், பாபர் அசாமை தொடர்ந்து கேப்டன் பதவியில் தொடர கேட்டுக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர் தோல்வியால் விமர்சனம் : பாகிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து வெளியாகுவதாக பாபர் அசாம் அறிவிப்பு !

இதனிடையே பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவர் இன்சமாம் உல் ஹக், பாகிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும், பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு உறுப்பினர்கள் மொத்தமாக நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தில் இருந்து பாகிஸ்தான் அணியை வழிநடத்த அழைக்கப்பட்டது இப்போது நினைவில் இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் வெற்றி, தோல்வி, ஏற்றம், இறக்கம் என்று அனைத்து சோதனைகளையும் சந்தித்தேன். ஆனால் பாகிஸ்தான் அணி மீதான மதிப்பை உயர்த்தவும், பெருமையடைய செய்யவும் உண்மையான போராடினேன். ஒயிட் பால் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை நம்பர் 1 இடத்திற்கு அழைத்து சென்றேன்.

தற்போது 3 வகையான கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். எனக்கு கடினமான முடிவு என்றாலும், இதற்கு சரியான நேரம் இதுதான் என்று நினைக்கிறேன். அதேபோல் பாகிஸ்தான் அணிக்காக 3 வகையான கிரிக்கெட் போட்டிகளில் வீரராக விளையாடுவேன். அடுத்த கேப்டனுக்கு எனது முழு ஆதரவையும், அர்ப்பணிப்பையும் வழங்குவேன். இத்தனை காலமாக என் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பை வழங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்திற்கு நன்றி" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories