விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு : 9 சீனியர் வீரர்கள் அதிரடி நீக்கம் !

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் உலகக்கோப்பையில் இடம்பெற்றிருந்த ஒன்பது வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு : 9 சீனியர் வீரர்கள் அதிரடி நீக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2022ம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கட் அணியின் பயிற்சியாளராக ப்ரென்டன் மெக்கலமும், அணி கேப்டனாக பென் ஸ்டோக்ஸும் நியமிக்கப்பட்டனர். அதன்பின்னர் இயான் மார்கன் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகப்படுத்தி உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்த அட்டாக்கிங் கேமை டெஸ்ட்டிலும் அறிமுகப்படுத்தினர்.

இவர்களின் இந்த புதிய பரிமாணம் bazball என அழைக்கப்பட்டது. இந்த முறையில் நியூஸிலாந்து, இந்தியா போன்ற அணிகளை சொந்த மண்ணில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. அதன் பின்னர் பலரும் இந்த bazball முறைக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்தனர்.

இந்த bazball முறையை பின்பற்றி இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பையில் அதிரடி ஆட்டத்தை இங்கிலாந்து அணி வெளிப்படுத்தும் என்று கூறப்பட்டது. ஆனால், இந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி மிகமோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. 9 போட்டிகளில் 6 தோல்விகளை சந்தித்த அந்த அணி புள்ளிப்பட்டியலில் 7-வது இடம்பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு : 9 சீனியர் வீரர்கள் அதிரடி நீக்கம் !

இந்த தொடரைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் ஆடுகிறது. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் உலகக்கோப்பையில் இடம்பெற்றிருந்த ஒன்பது வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், மொயின் அலி, அதில் ரஷீத், டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ போன்ற வீரர்கள் இந்த தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து ஓடிஐ அணி:

ஜோஸ் பட்லர் (கேப்டன்), ரெஹான் அகமது, கஸ் அட்கின்சன், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாக் க்ராலி, சாம் கரன், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், ஒல்லி போப், பில் சால்ட், ஜோஷ் டங், ஜான் டர்னர்.

டி20 அணி:

ஜோஸ் பட்லர் (கேப்டன்), ரெஹான் அகமது, மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஹாரி புரூக், சாம் கரன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், டைமல் மில்ஸ், அடில் ரஷித், பில் சால்ட், ஜோஷ் டங்கு, ரீஸ் டாப்லி, ஜான் டர்னர், கிறிஸ் வோக்ஸ்

banner

Related Stories

Related Stories