விளையாட்டு

"இங்கு வரும்பொழுது நல்ல நிலைமையில் இருந்தேன், ஆனால் இப்போது" -இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் விரக்தி !

"இங்கு வரும்பொழுது நல்ல நிலைமையில் இருந்தேன், ஆனால் இப்போது" -இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் விரக்தி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2023-ம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தியா தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, இதுவரை நடைபெற்றுள்ள 6 ஆட்டங்களில் 5 ஆட்டங்களில் தோல்வியைத் தழுவி புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் வகிக்கிறது.

இந்த தொடரில் நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் கூட இரண்டு வெற்றிகள் பெற்றுள்ள நிலையில், இங்கிலாந்து அணி வெறும் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. அதோடு பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டு துறையிலும் அந்த அணி மோசமாக செயல்பட்டு வருகிறது.

இந்த சூழலில் நேற்று இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை சந்தித்தது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 253 ரன்னுக்கு ஆட்டமிழந்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் தொடர்ந்து 5 ஆட்டங்களில் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

"இங்கு வரும்பொழுது நல்ல நிலைமையில் இருந்தேன், ஆனால் இப்போது" -இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் விரக்தி !

இந்த போட்டி முடிந்தபின்னர் பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர், இது நிச்சயமாக எங்களுக்கு வேதனை அளிக்கிறது. நாங்கள்2019 ஆண்டு போல நாங்கள் உச்சத்தை தொட விரும்புகிறோம். ஆனால் அது மிகவும் கடினமானது. அதற்கு எவ்வளவு உழைப்பை கொடுக்க வேண்டி இருக்கும் என்று எங்களுக்கு தெரியும்.

நாங்கள் எங்கள் மக்களை ஏமாற்றி இருக்கிறோம் என்று உணருகிறோம். இந்த ரன்கள் துரத்துவதற்கு சரியாக இருக்கும் என்று நினைத்தேன். என்னுடைய பார்ம் மிகவும் கவலைக்குரிய ஒன்றாக இருந்து வருகிறது. நான் இங்கு வரும்பொழுது நல்ல நிலைமையில் இருந்தேன். ஆனால் என்னுடைய மோசமான ஃபார்ம் எனது அணிக்கு பெரிய பிரச்சனையை கொடுக்கிறது. அடுத்து மீண்டும் நெதர்லாந்துக்கு எதிரான போட்டிக்கு திரும்பி வரவேண்டும். பார்ம்க்கு வருவதற்கான வழிகளை பார்க்க வேண்டும்"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories