விளையாட்டு

“எனக்கு சிலை வைத்தற்கு மிக்க நன்றி” - சச்சினுக்கு வைக்கப்பட்ட சிலை குறித்து கிண்டல் செய்த ஆஸ்.வீரர் !

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், எனக்கு வான்கடேவில் சிலை வைத்தற்கு மிக்க நன்றி என தெரிவித்துள்ளார்.

 “எனக்கு சிலை வைத்தற்கு மிக்க நன்றி” - சச்சினுக்கு வைக்கப்பட்ட சிலை குறித்து கிண்டல் செய்த ஆஸ்.வீரர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கிரிக்கெட் உலகின் கடவுளாக போற்றப்படும் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் நூறு சதங்கள் அடித்த ஒரே வீரராக திகழ்ந்து வருகிறார். மேலும் சரவதேச கிரிக்கெட் போட்டிகளில் 30,000 ரன்களை கடந்து யாரும் படைக்காத சாதனைகளை படைத்துள்ளார்.

இந்திய அணிக்காக இத்தகைய சாதனைகள் படைத்த சச்சின் டெண்டுல்கருக்கு அவரின் சொந்த நகரமான மும்பையில் அமைந்துள்ள வான்கடே மைதானத்தில் மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் சிலை திறக்கப்பட்டது. இந்த சிலை இந்தியா - இலங்கை உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக திறந்து வைக்கப்பட்டது.

ஆனால், இந்த சிலையில் இருக்கும் முகன் சச்சினின் முக அமைப்பை போல இல்லை என்றும், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித்தின் முகஅமைப்பு போல இருப்பதாகவும் விமர்சனம் எழுந்தது. பலரும் சச்சின் சிலை மற்றும் ஸ்மித்தின் முகத்தை ஒப்பிட்டு இது குறித்து விமர்சனம் செய்து வந்தனர்.

 “எனக்கு சிலை வைத்தற்கு மிக்க நன்றி” - சச்சினுக்கு வைக்கப்பட்ட சிலை குறித்து கிண்டல் செய்த ஆஸ்.வீரர் !

இந்த நிலையில் , இதனை குறிப்பிட்டு ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், எனக்கு வான்கடேவில் சிலை வைத்தற்கு மிக்க நன்றி என தெரிவித்துள்ளார். இது இளமைக் கால சச்சினை முன் மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்ட சிலை என சிலர் கூறும் நிலையில் இது எந்த வகையில் உண்மையான கருத்தும் என்றும் உருதி செய்யப்படவில்லை.

அதே நேரம் இந்த சிலை மாற்றம் செய்யப்படுமா என்பது குறித்து விரையில் மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவிக்கும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சிலை அமைக்கும் பணி கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories