விளையாட்டு

"போட்டியின் நடுவில் அனைத்தும் தலைகீழாக மாறும் என நினைத்தேன், ஆனால்.." - இங்கிலாந்து கேப்டன் விரக்தி !

இந்த தோல்வியும் எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்திருக்கிறது என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.

"போட்டியின் நடுவில் அனைத்தும் தலைகீழாக மாறும் என நினைத்தேன், ஆனால்.." - இங்கிலாந்து கேப்டன் விரக்தி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2022ம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கட் அணியின் பயிற்சியாளராக ப்ரென்டன் மெக்கலமும், அணி கேப்டனாக பென் ஸ்டோக்ஸும் நியமிக்கப்பட்டனர். அதன்பின்னர் இயான் மார்கன் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகப்படுத்தி உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்த அட்டாக்கிங் கேமை டெஸ்ட்டிலும் அறிமுகப்படுத்தினர்.

இவர்களின் இந்த புதிய பரிமாணம் bazball என அழைக்கப்பட்டது. இந்த முறையில் நியூஸிலாந்து, இந்தியா போன்ற அணிகளை சொந்த மண்ணில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. அதன் பின்னர் பலரும் இந்த bazball முறைக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்தனர்.

இந்த bazball முறையை பின்பற்றி இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பையில் அதிரடி ஆட்டத்தை இங்கிலாந்து அணி வெளிப்படுத்தும் என்று கூறப்பட்டது. ஆனால், இதுவரை நடைபெற்றுள்ள 6 ஆட்டங்களில் 5 ஆட்டங்களில் இங்கிலாந்து அணி தோல்வியடைத்துள்ளது.

"போட்டியின் நடுவில் அனைத்தும் தலைகீழாக மாறும் என நினைத்தேன், ஆனால்.." - இங்கிலாந்து கேப்டன் விரக்தி !

அதிலும் நேற்றைய போட்டியில் இந்திய அணியுடனான தோல்வி காரணமாக இங்கிலாந்து அணி தொடரில் இருந்தே கிட்டத்தட்ட வெளியேறியுள்ளது. மேலும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்திய அணியுடனான தோல்விக்கு பின்னர் பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர், " அருமையான பந்துவீச்சில் மூலம் இந்தியாவுக்கு அழுத்தத்தைக் கொடுத்து அவர்களை 229 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினோம்.

அப்போது, அனைத்தும் எங்களுக்கு சாதகமாக இருப்பதைப் போல தோன்றியது. இதன் மூலம் அனைத்தும் தலைகீழாக மாறும் என நினைத்தேன். ஆனால். பேட்டிங்கில் எங்களுடைய சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தத் தவறிவிட்டோம்.எங்களது அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டிய வழியை விரைவில் கண்டுபிடித்தாக வேண்டும். இந்த தோல்வியும் எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்திருக்கிறது " என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories