விளையாட்டு

"சிறிய அணியிடம் தோற்பதை எப்படி ஏற்பது" - செருப்பால் தலையில் அடித்துக்கொண்ட வங்கதேச ரசிகர்: காரணம் என்ன ?

வங்கதேச அணியின் தோல்வியால் கடும் ஆத்திரமடைந்த அந்நாட்டு ரசிகர் ஒருவர் தனது செருப்பை எடுத்து தன்னையே அடித்துக்கொண்டார்.

"சிறிய அணியிடம் தோற்பதை எப்படி ஏற்பது" - செருப்பால் தலையில் அடித்துக்கொண்ட வங்கதேச ரசிகர்: காரணம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது.

இந்த உலகக்கோப்பை தொடரில் 10 அணிகள் இடம்பெற்றுள்ள நிலையில் , ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா ஒருமுறை மோதவேண்டும். இதில் முதல் 4 இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதோடு முதல் 7 இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராகும்.

இந்த தொடரில் அனைத்து அணிகளும் ஒருமுறையாவது வெற்றிபெற்றுள்ள நிலையில், அசோசியேட் அணியான நெதர்லாந்து அணி, இந்த தொடரில் அசத்தி வருகிறது. ஏற்கனவே தென்னாபிரிக்க அணியை வீழ்த்திய நெதர்லாந்து, நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணியையும் வீழ்த்தியது .

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், 230 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வங்கதேச அணி 142 ரன்னில் ஆட்டமிழந்தது தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியை காண ஏராளமான வங்கதேச ரசிகர்கள் வந்த நிலையில், அந்த அணியின் தோல்வியால் கடும் ஆத்திரமடைந்த ரசிகர் ஒருவர் தனது செருப்பை எடுத்து தன்னையே அடித்துக்கொண்டார்.

இது குறித்து பேசிய வங்கதேச ரசிகர், "பெரிய அணிகளிடம் தோல்வியடைவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நெதர்லாந்து போன்ற சிறிய அணியிடம் தோற்பதை எப்படி ஏற்கமுடியும்? இந்த ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்களால் வீரர்களை அடிக்க முடியாது, அதனால் அவர்களுக்கு பதிலாக நான் என்னை அறைந்துகொள்கிறேன்" என்று கூறினார். இந்த வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories