விளையாட்டு

நாக் அவுட் போட்டியில் இந்தியா தோற்க இந்த வெறிதான் காரணம்- KL ராகுலை குறிப்பிட்டு விமர்சித்த கம்பீர்!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுலின் செயலை இந்திய முன்னாள் வீரர் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாக் அவுட் போட்டியில் இந்தியா தோற்க இந்த வெறிதான் காரணம்- KL ராகுலை குறிப்பிட்டு விமர்சித்த கம்பீர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் நடைபெறுகிறது.

இந்த தொடரின் தனது முதல் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை சந்தித்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 199 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ரோஹித், கிஷன், ஷ்ரேயாஸ் ஆகியோர் ரன் கணக்கை துவங்காமலே ஆட்டமிழந்தனர். எனினும் பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி- கே.எல்.ராகுல் இணை இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றது.

நாக் அவுட் போட்டியில் இந்தியா தோற்க இந்த வெறிதான் காரணம்- KL ராகுலை குறிப்பிட்டு விமர்சித்த கம்பீர்!

எனினும் கோலி 85 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ராகுல் 97 ரன்கள் குவித்து சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். ஆனால், சிக்சர் அடித்து வெல்ல வைத்ததற்கு மகிழாமல், பவுண்டரி சென்று இருந்தால், அடுத்து சிக்ஸர் அடித்து சதம் அடித்திருக்கலாம் என்று வருத்தப்பட்டது போல அவர் செய்கை செய்தது சர்ச்சையானது.

இந்த நிலையில், கே.எல்.ராகுலின் இந்த செயலை இந்திய முன்னாள் வீரர் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்துப் பேசியுள்ள அவர், "30, 40 ரன், அல்லது எவ்வளவு ரன் எடுக்கிறீர்கள் என்பது முக்கியமே கிடையாது. நீங்கள் எடுக்கக்கூடிய ரன்களால் அணி வெற்றி பெற்றதா என்பது மட்டும்தான் முக்கியம். ஐசிசி நாக் அவுட் போட்டியில் நீண்ட காலமாக ஜெயிக்காமல் இருப்பதற்கு, தனிப்பட்ட வீரர்களின் புள்ளிவிபரம் மீதான வெறியே காரணம் என்று நினைக்கிறேன்.தனிப்பட்ட வீரர்களின் புள்ளிவிபரங்கள் மீதான மோகத்தை முடித்துக் கொள்ள வேண்டும். சதம் அடிப்பது முக்கியமில்லை" என்று விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories