விளையாட்டு

"பாகிஸ்தான் வீரர்கள் தோல்வி பயம் பிடித்து ஆடினர்" -பாக். வாரிய முன்னாள் தலைவர் விமர்சனம் !

இந்தியாவுடனான படுதோல்வியை தொடர்ந்து பாகிஸ்தான் அணி பயந்துகொண்டு ஆடியது என பாகிஸ்தான் வாரியத்தின் முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா விமர்சித்துள்ளார்.

"பாகிஸ்தான் வீரர்கள் தோல்வி பயம் பிடித்து ஆடினர்" -பாக். வாரிய  முன்னாள் தலைவர் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் ஆசியக்கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல குரூப் சுற்றில் பாகிஸ்தான் அணி நேபாள அணியை நொறுக்கி அபாரவெற்றிபெற்றது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டது. அந்த போட்டியில் மழை மட்டும் பெய்யாமல் இருந்தால் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றிருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இந்த போட்டி முடிவு கிடைக்கவில்லை என்றாலும் குரூப் பிரிவில் முதல் இடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில், வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றிபெற்றது. ஆனால், அடுத்து நடைபெற்ற போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மோசமாக செயல்பட்ட பாகிஸ்தான் அணி 228 வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

"பாகிஸ்தான் வீரர்கள் தோல்வி பயம் பிடித்து ஆடினர்" -பாக். வாரிய  முன்னாள் தலைவர் விமர்சனம் !

பின்னர் நடைபெற்ற முக்கியமான போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில், கடைசி பந்தில் வெற்றியை இழந்தது. இதன் காரணமாக ஆசியக்கோப்பை தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியது. இந்த வெளியேற்றத்தைத் தொடர்ந்து அந்த அணியை அந்நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கடுமையான விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த இந்தியாவுடனான படுதோல்வியை தொடர்ந்து பாகிஸ்தான் அணி பயந்துகொண்டு ஆடியது என பாகிஸ்தான் வாரியத்தின் முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், " இந்தியாவுக்கு எதிரான போட்டியில் படுதோல்வியடைந்த பாகிஸ்தான் அதிலிருந்து மீள முடியாமலே இலங்கை அணியை சந்தித்தது. இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் தோல்வி பயம் பிடித்து ஆடியது போல் ஆடினர்.

ஒரு அணியாக ஆதிக்கம் செலுத்தும் வகையில் யாரும் ஆடவில்லை. அதிலும் பகர் ஜமான் இப்போதெல்லாம் யார் வேண்டுமானாலும் வீழ்த்திவிடக் கூடிய வீரராக இருக்கிறார். இதற்கு அவரே அணியிலிருந்து விலகி விடலாம். ஸ்லோ பிட்ச்களில் பாபர் அசாம் கூட தடுமாறுகிறார். ஒரு கேப்டனாக ஆணித்தரமான முடிவுகளை அவர் எடுக்கப் பழக வேண்டும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories