விளையாட்டு

"பலமான எங்கள் பந்துவீச்சை இந்திய அணியால் சமாளிக்க முடியுமா ? " - பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் சவால் !

எங்கள் பந்துவீச்சு மிகவும் பலமானது என்பதால் இந்திய அணிக்கு எங்களால் சவால் அளிக்க முடியும் என பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் கூறியுள்ளார்.

"பலமான எங்கள் பந்துவீச்சை இந்திய அணியால்  சமாளிக்க முடியுமா ? " - பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் சவால் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ள நிலையில், இந்த உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு பாகிஸ்தான் அணி சவாலாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

"பலமான எங்கள் பந்துவீச்சை இந்திய அணியால்  சமாளிக்க முடியுமா ? " - பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் சவால் !

இதனிடையே இந்திய தேர்வு தலைவர் அகர்கர் பாகிஸ்தான் அணியின் ஷாகீன் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப் மற்றும் நசீம் ஷா ஆகியோரை சமாளிக்க இந்திய அணியின் விராட் கோலி போதும் என்று கூறியதாக தவறான செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், இந்த தகவலுக்கு பாகிஸ்தான் அணி வீரர் ஷதாப் கான் பதிலளித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "இந்திய அணியில் இருந்தோ, அல்லது பாகிஸ்தான் அணியில் இருந்தோ என்ன வேண்டுமானாலும் கருத்துகள் சொல்லப்படலாம். ஆனால் போட்டி நாடாகும் நாளில்தான் உண்மை என்னவென்பது தெரியவரும். எங்கள் பந்துவீச்சு மிகவும் பலமானது. இதனால் இந்திய அணிக்கு எங்களால் சவால் அளிக்க முடியும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories