விளையாட்டு

மிரளவைத்த ஜூடி ஆல்பாவின் பாஸ்.. இன்டர் மியாமி அணிக்காக தொடர்ந்து அசத்தும் மெஸ்ஸி.. தொடரும் ஆதிக்கம் !

2-0 என்ற கணக்கில் மெஸ்ஸியின் இன்டெர் மியாமி அணி நியூயார்க் அணியை வீழ்த்தியது.

மிரளவைத்த ஜூடி ஆல்பாவின் பாஸ்.. இன்டர் மியாமி அணிக்காக தொடர்ந்து அசத்தும் மெஸ்ஸி.. தொடரும் ஆதிக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

அர்ஜெண்டின கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி ’பிரான்சின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன்’ என்ற அழைக்கப்படும் PSG கால்பந்து அணிக்காக விளையாடி வந்தார் . PSG அணியுடனான மெஸ்ஸியின் ஒப்பந்தம் இந்தாண்டோடு முடிவடையும் நிலையில், அடுத்ததாக அவர் தொடர்ந்து PSG அணியில் தொடருவாரா அல்லது வேறு அணிக்கு செல்வாரா என்ற கேள்வி எழுந்தது. அ

திலும் ரொனால்டோ ஆடும் சவுதி லீக்கின் அல் நாசர் அணியின் போட்டி கிளப்பான அல் ஹிலால் ரொனால்டோவை விட அதிக தொகைக்கு மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய தயாராக இருப்பதாக கூறப்பட்டது.மேலும், மெஸ்ஸி நீண்ட நாள் ஆடிய பார்சிலோனா கால்பந்து கிளப் மீண்டும் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய தயாராக இருப்பதாகவும், செய்திகள் வெளியாகின.

ஆனால், மெஸ்ஸி அமெரிக்காவின் MLS தொடரில் பங்கேற்கும் இன்டர் மியாமி அணியில் இணையவுள்ளதாக அந்த அணி அதிகாரபூர்வமாக அறிவித்தது.அதன் படி தற்போது இன்டெர் மியாமி அணிக்காக மெஸ்ஸி ஆடி வருகிறார். அதில் லீக்ஸ் கோப்பையை முதல் முறையாக இன்டெர் மியாமி கோப்பையை வென்றது.

மிரளவைத்த ஜூடி ஆல்பாவின் பாஸ்.. இன்டர் மியாமி அணிக்காக தொடர்ந்து அசத்தும் மெஸ்ஸி.. தொடரும் ஆதிக்கம் !

இந்த தொடரில் 10 கோல் அடித்து தொடரில் அதிக கோல் அடித்த வீரராக திகழ்ந்த மெஸ்ஸி அதற்கான விருதை வென்றதோடு ஆட்ட நாயகன் விருதையும் வென்று அசத்தினார். அதோடு இந்த தொடரில் இன்டர் மியாமி அணிக்காக அதிக கோல் அடித்த வீரராகவும் மாறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து லீக் தொடரில் இன்டெர் மியாமி அணி நியூ யார்க் அணியை சந்தித்தது. இதில் 37-வது நிமிடத்தில் இன்டெர் மியாமி அணிக்காக கோமஸ் கோல் அடித்து அசத்தினார். பின்னர் இரண்டாவது பாதியில் களமிறங்கிய மெஸ்ஸி ஆட்டத்தின் 89 வது நிமிடத்தில் கோல் அடித்தார். இந்த கோல் அடிக்கும் போது இடது புற தடுப்பாட்டக்காரராக ஆடிய ஜூடி ஆல்பா காற்றில் பறந்து மெஸ்ஸிக்கு கொடுத்த துல்லியமான பாஸ் இந்த வெற்றிக்கான கோலை அடிக்க உதவியது. இவரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இறுதியில் 2-0 என்ற கணக்கில் இன்டெர் மியாமி அணி நியூ யார்க் அணியை வீழ்த்தியது.

banner

Related Stories

Related Stories