விளையாட்டு

FIFA மகளிர் உலகக் கோப்பை : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 3-ம் இடம் பிடித்த ஸ்வீடன்.. நாளை இறுதிப்போட்டி !

ஸ்வீடன் அணி 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி உலககோப்பை தொடரில் மூன்றாவது இடம் பிடித்தது.

FIFA மகளிர் உலகக் கோப்பை : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 3-ம் இடம் பிடித்த ஸ்வீடன்.. நாளை இறுதிப்போட்டி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

FIFA மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. அதன் லீக் போட்டிகள் முடிவடைந்து நிலையில், முக்கிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லீக் சுற்றில் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அணியான ஜெர்மனி, 7-வது இடத்தில் இருக்கும் கனடா, 8-வது இடத்தில் இருக்கும் பிரேசில் போன்ற அணிகள் வெளியேறின.

அதனைத் தொடர்ந்து 'ரவுண்ட் ஆப் 16' ஆட்டத்தில் நான்கு முறை உலககோப்பை வென்ற அணியும், நடப்பு சாம்பியனுமான அமெரிக்கா - ஸ்வீடன் அணியை எதிர்கொண்டது. இதில் ஸ்வீடன் அணி அமெரிக்காவை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தியது.

காலிறுதியில் ஸ்பெயின், நெதர்லாந்து, ஜப்பான், ஸ்வீடன், இங்கிலாந்து, கொலம்பியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய அணிகள் முன்னேறின. இதில் காலிறுதி போட்டியில் ஸ்பெயின் அணி நெதர்லாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு சுற்றுக்கு முன்னேறியது. அதே போல மற்றொரு போட்டியில், ஸ்வீடன் அணி ஜப்பானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

அதோடு போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியா பிரான்ஸ் அணியை 7-க்கு 6 என்ற கணக்கில் பி அரையிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு போட்டியில் ஐரோப்பிய சாம்பியனான இங்கிலாந்து அணி, கொலம்பியா அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

தொடர்ந்து நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி ஸ்வீடன் அணியை எதிர்கொண்டது. இதில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் ஸ்வீடன் அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

FIFA மகளிர் உலகக் கோப்பை : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 3-ம் இடம் பிடித்த ஸ்வீடன்.. நாளை இறுதிப்போட்டி !

அதன்பின்னர் நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில், 3-வது இடத்துக்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் அரையிறுதியில் தோல்வியைத் தழுவிய ஸ்வீடன் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் பெனால்டி மூலம் கிடைத்த வைப்பில் ஸ்வீடன் அணி முதல் கோலை அடித்து அசத்தியது. இதனால் முதல் பாதியில் ஸ்வீடன் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியதும் பதில் கோல் அடிக்க கடுமையாக முயன்றது. ஆனால், ஆட்டத்தின் 62-வது நிமிடத்தில் ஸ்வீடன் அணி மற்றொரு கோல் அடித்தது. இறுதிவரை ஆஸ்திரேலிய அணி ஒரு கோல் கூட அடிக்க முடியாததால் ஸ்வீடன் அணி 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி உலககோப்பை தொடரில் மூன்றாவது இடம் பிடித்தது. நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

banner

Related Stories

Related Stories