விளையாட்டு

மீண்டும் களத்துக்கு திரும்பிய பும்ரா.. அயர்லாந்து அணிக்கு எதிராக இந்தியா திரில் வெற்றி.. நடந்தது என்ன ?

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மீண்டும் களத்துக்கு திரும்பிய பும்ரா.. அயர்லாந்து அணிக்கு எதிராக இந்தியா திரில் வெற்றி.. நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக அணிக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றது. ஆனால் டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது.

அதனைத் தொடர்ந்து பும்ரா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணியோடு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி, நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி அயர்லாந்து அணி களமிறங்க நீண்ட நாளுக்கு பின்னர் இந்திய அணிக்காகப் பும்ரா தனது முதல் ஓவரை வீசினர். இதில் முதல் பந்தே பௌண்டரிக்கு பறக்க, அடுத்த பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்தினார் பும்ரா. தொடர்ந்து அதே ஓவரில் அடுத்த விக்கெட்டும் வீழ்ந்தது.

மீண்டும் களத்துக்கு திரும்பிய பும்ரா.. அயர்லாந்து அணிக்கு எதிராக இந்தியா திரில் வெற்றி.. நடந்தது என்ன ?

இதே போல பும்ராவைப் போல நீண்ட நாளுக்கு பின்னர் களமிறந்த பிரஷித் கிருஷ்ணாவும் பவர்பிளே வில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். மேலும், அர்ஸதீப் சிங் மட்டும் பிஷ்ணோய் தலா ஒரு விக்கெட் வீழ்த்த 31 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் கேம்ப்பர், மேக்கார்த்தி சிறப்பாக ஆட இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் குவித்தது.

பின்னர் இந்திய அணி சார்பில் ஜெய்ஸ்வால், ருத்துராஜ் களமிறங்கினர். இருவரும் சீரான வேகத்தில் ரன்கள் குவித்தனர். ஆனால் 7-வது ஓவரில் அடுத்தடுத்து ஜெய்ஸ்வால் மற்றும் திலக் வர்மா ஆட்டமிழந்தனர். அதே ஓவரில் மழை பெய்ய ஆட்டம் ஆட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டது.

இறுதியில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்பட்டபோது வெற்றிக்கு தேவையான ரன்களை விட 2 ரன்கள் கூடுதலாக இந்திய அணி குவிந்திருந்தது. இதனால் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகன் விருது பும்ராவுக்கு வழங்கப்பட்டது.

banner

Related Stories

Related Stories