விளையாட்டு

மீண்டும் சொதப்பல்.. தொடரை வென்ற West Indies.. 17 ஆண்டுகளில் இல்லாத மோசமான சாதனை படைத்த இந்தியா !

17 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரை இழந்து இந்திய அணி மோசமான சாதனை படைத்துள்ளது.

மீண்டும் சொதப்பல்.. தொடரை வென்ற West Indies.. 17 ஆண்டுகளில் இல்லாத மோசமான சாதனை படைத்த இந்தியா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள். டி20 தொடரில் பங்கேற்க அந்த நாட்டுக்கு சென்றுள்ளது. இதன் டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றது.

அதனை தொடர்ந்து தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. பின்னர்ட் தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது டி20 போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றிப்பெற்றது. பின்ன நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது.பின்னர் முக்கியமான 4-வது டி20 போட்டியில், இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 2-2 என சமன் செய்தது.

மீண்டும் சொதப்பல்.. தொடரை வென்ற West Indies.. 17 ஆண்டுகளில் இல்லாத மோசமான சாதனை படைத்த இந்தியா !

இந்த நிலையில், மிகவும் முக்கியமான 5-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. எனினும் சூரியகுமார் மட்டும் சிறப்பாக ஆடி 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது.

பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர் பிரண்டன் கிங் (85*) இந்திய பந்து வீச்சாளர்களை சிதறடித்தார். அவரோடு பூரானும் (47) விலாச மேற்கித்திய தீவுகள் அணி 18 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரை இழந்து இந்திய அணி மோசமான சாதனை படைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories