விளையாட்டு

இந்தியாவின் El Classico : 4 ஆண்டுகளுக்கு பிறகு மோகன் பகான் அணியை வீழ்த்திய ஈஸ்ட் பெங்கால் !

சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு (1,658 நாட்கள்) மோகன் பகான் அணியை ஈஸ்ட் பெங்கால் அணி வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.

இந்தியாவின் El Classico : 4 ஆண்டுகளுக்கு பிறகு மோகன் பகான் அணியை வீழ்த்திய ஈஸ்ட் பெங்கால் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இப்போது கால்பந்தில் இந்தியா பின் தங்கி இருந்தாலும் ஒரு காலத்தில் கால்பந்தில் இந்தியா உலக அரங்கில் அதகளப்படுத்திய காலமும் இருந்தது என்பதே பலருக்கு தெரியாத ஒரு சோக வரலாறுதான். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா ஒரு முறை தகுதி பெற்றுள்ளது.

1950-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற கால்பந்து தொடரில் ஆசிய கண்டத்தில் இருந்து பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, பர்மா ஆகிய அணிகள் தகுதி சுற்றில் இருந்து விலகியதால்தான் இந்தியாவுக்கு அதில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது.ஆனால், பூட்ஸ் இல்லாமல் வெறும்காலில் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால் அந்த தொடரில் இந்திய அணி பங்கேற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

. அந்த காலத்தில் ஆசிய கண்டத்தில் இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்தது. 1951-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் வெறும்காலில் இந்திய அணி தங்கப்பதக்கம், 1956-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 4-வது இடம், 1962-ம் ஆண்டு ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில தங்கம் பதக்கம் என அசத்தி இருந்தது.

அப்போது இந்தியாவில் கால்பந்து கிளப்களும் புகழ்பெற்று இருந்தது. அதிலும் கொல்கத்தாவை மையமாக கொண்ட ஈஸ்ட் பெங்கால் மற்றும் மோகன் பகான் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் ரசிகர்கள் மோதிக்கொள்ளும் அளவு பரபரப்பாக இருக்கும். இந்த போட்டியை இந்தியாவின் எல் கிளாசிகோ என்றே சொல்லும் அளவு இரு அணிகளும் களத்தில் மோதிக்கொள்வர்.

இந்தியாவின் El Classico : 4 ஆண்டுகளுக்கு பிறகு மோகன் பகான் அணியை வீழ்த்திய ஈஸ்ட் பெங்கால் !

அப்படி புகழ் பெற்ற இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் சமீப காலத்தில்,மோகன் பகான் அணியே வெற்றிபெற்று வந்தது. இதனால் ஈஸ்ட் பெங்கால் அணி ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில், 1,658 நாட்களுக்குப் பின்னர் மோகன் பாகான் அணியை ஈஸ்ட் பெங்கால் அணி வீழ்த்தியுள்ளது.

நூற்றாண்டு பழமைவாய்ந்த டியூரான்டு கோப்பை தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் மோகன் பகான் மற்றும் ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. இதில், ஈஸ்ட் பெங்கால் அணி 1-0 என்ற கணக்கில் மோகன் பகான் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு (1,658 நாட்கள்) மோகன் பகான் அணியை ஈஸ்ட் பெங்கால் அணி வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. ஈஸ்ட் பெங்கால் அணியின் இந்த வெற்றியை அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories